பீர்த்தனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீர்த்தனா
பீர்கனா
கிராமம்
தொல்லியல் களம்
சிந்துவெளி நாகரிகம்
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்பத்தேஹாபாத்
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-HR
வாகனப் பதிவுHR
அருகமைந்த நகரம்பதேகாபாத்
இணையதளம்haryana.gov.in

பீர்த்தனா (Bhirrana, also Bhirdana and Birhana,) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள பத்தேகாபாத் மாவட்டத்தில் உள்ள சிந்துவெளி நாகரீத்தின் தொல்லியல் களம் கொண்ட சிறு கிராமம் ஆகும். [1][2]

பீர்த்தனா தொல்லியல் களத்தை அகழ்வாய்வு செய்ததில், இதன் வரலாறு அரப்பா நாகரிகத்திற்கு முந்தைய காலத்திற்கு நீண்டுள்ளது என வெளிப்பட்டுள்ளது.

அமைவிடம்[தொகு]

Bhirrana site
இருப்பிடம்அரியானா, இந்தியா
ஆயத்தொலைகள்29°33′15″N 75°33′55″E / 29.55417°N 75.56528°E / 29.55417; 75.56528
நீளம்190 m (620 அடி)
அகலம்240 m (790 அடி)
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 7570
பயனற்றுப்போனதுகிமு 2,600
காலம்அக்ரா மட்பாண்டப் பண்பாடு முதல் முதிர்ந்த அரப்பா பண்பாடு வரை
கலாச்சாரம்சிந்துவெளி நாகரிகம்
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்2003-04, 2004–05, 2005-06

இத்தொல்லியல் களம் புதுதில்லிக்கு வடகிழக்கே 220 கிமீ தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான பதேகாபாத் நகரத்திற்கு வடகிழக்கே 14 கிமீ தொலைவிலும் உள்ளது. பீர்த்தனா தெல்லியல் மேடு வடக்கு-தெற்கே 190 மீட்டரும்; கிழக்கு-மேற்கே 240 மீட்டரும்; 5.50 மீட்டர் உயரமும் கொண்டது.

அகழ்வாய்வுகள்[தொகு]

பீர்த்தனா தொல்லியல் மேட்டின் மூன்று களங்களை, இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 2003-04, 2004–05 மற்றும் 2005-06 ஆண்டுகளில் அகழ்வாய்வு செய்தது.

காலம்[தொகு]

பீர்த்தனா தொல்லியல் களம் அரப்பாவிற்கு முந்தைய, கிமு 7,500 முதல் கிமு 6,200 வரை நிலவிய அக்ரா மட்பாண்டப் பண்பாடு காலத்திற்குரியது என தொல்லியல் அறிஞர் இராவ் கூறுகிறார்.[3][4][5] பீர்த்தனா தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களின் கரிமக் காலக் கணிப்பின்படி, கிமு 7570-7180 முதல் கிமு 6689-6201 வரையானது என நிறுவப்பட்டுள்ளது.[3][4]

பண்பாடு[தொகு]

பீர்த்தனா தொல்லியல் கள அகழ்வாய்வில் இப்பகுதியில் முதலில் அக்ரா மட்பாண்டப் பண்பாடும் பின்னர் துவக்க கால மற்றும் முதிர்ந்த அரப்பா பண்பாடு, நிலவியதாக அறியப்படுகிறது.[3][4][5]

தொல்பொருட்கள்[தொகு]

கடற்கன்னி போன்ற தேவதைகள் மற்றும் பெண்கள் உருவம் பதித்த மட்பாண்டங்களும் கிடைத்துள்ளது. [1] [6][7]

பிற தொல்பொருட்கள்[தொகு]

வண்ண ஆரங்களுடன் கூடிய சுடுமண் சக்கரங்கள் இத்தொல்லியல் களத்தில் கிடைத்துள்ளது. [8] ஆற்றாங்கரை குழைவுமண் பகுதியில் மக்கள் சடங்குகள் செய்வதற்கும், மட்பாண்டத் தொழிலுக்கும் பயன்படுத்தியுள்ளனர். [6] பல அறைகள் கொண்ட வீடுகள் பீர்த்தனா தொல்லியல் களத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒரு வீடு 10 அறைகளுடனும், ஒரு வீடு 3 அறைகளுடனும் இருந்தது. வீடுகள் சமயலறை, சமையல் அடுப்புகள், அரைத்த தானியங்கள் மற்றும் முற்றவெளி கொண்டிருந்தது.[6] பொதுவாக சிந்துவெளி நாகரிகம் பீர்த்தனா பகுதியில் நிலவியதாக அறியப்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • Ahmed, Mihktar (2014), Ancient Pakistan - an Archaeological History
  • Coningham; Young (2015), The Archaeology of South Asia: From the Indus to Asoka, c.6500 BCE–200 CE, Cambridge University Press
  • Dikshit, K.N. (2013), "Origin of Early Harappan Cultures in the Sarasvati Valley: Recent Archaeological Evidence and Radiometric Dates" (PDF), Journal of IndIan Ocean Archaeology No. 9, 2013, archived from the original (PDF) on 2017-01-18
  • Mani, B.R. (2008), "Kashmir Neolithic and Early Harappan : A Linkage" (PDF), Pragdhara 18, 229–247 (2008), archived from the original (PDF) on 2017-01-18, retrieved 2019-09-28
  • Sarkar, Anindya (2016), "Oxygen isotope in archaeological bioapatites from India: Implications to climate change and decline of Bronze Age Harappan civilization", Scientific Reports, 6, doi:10.1038/srep26555, PMC 4879637

மேலும் படிக்க[தொகு]

  • The Tribune, 2 January 2004
  • Puratattva, The Bulletin of the Archaeological Society of India No. 34, 35 and 36;
  • Man and Environment xxxi

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீர்த்தனா&oldid=3439032" இருந்து மீள்விக்கப்பட்டது