மாலத்தீவின் வரலாறு
மாலத்தீவு (The Maldives ) என்பது 1192 தீவுகளை உள்ளடக்கிய, 26 இயற்கையான பவளத்தீவுகள் கொண்டிருக்கும் ஒரு நாடாகும்.
வரலாற்றுப் பின்னணி
[தொகு]ராடன் எனப்படும் ராசாக்களாலும் எப்போதாவது ராணின் எனப்படும் ராணிகளாலும் மிகவும் பண்டைய காலத்திலிருந்தே மாலத்தீவு ஆளப்பட்டு வந்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் முக்கியமான கடல் பாதையில் இத்தீவு அமைந்துள்ளதால் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெற்று வந்துள்ளது. இந்தியாவும் இலங்கையும் மாலத்தீவின் அண்டை நாடுகளாக இருக்கின்றன. இவ்விரு நாடுகளும் பல நூற்றாண்டுகளாக மாலத்தீவுடன் நெருங்கிய கலாச்சார மற்றும் பொருளாதாரத் தொடர்பு கொண்டுள்ளன. பலகறை சங்கு என்ப்படும் கடல் பொருள் மாலத்தீவுகளுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கியுள்ளது. பின்னர், இச்சங்குகள் ஆசியா முழுவதும் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடலோரப் பகுதிகளிலும் பணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பண்டைய இந்தியாவில் அரசாண்ட கலிங்கர்களின் தாக்கம் இத்தீவில் அதிகமாகக் காணப்படுகிறது. இவர்களே கடல் வழியாக இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கு வியாபாரத்திற்காக வந்துள்ளனர். தவிர பௌத்த மதத்தையும் இத்தீவில் பரப்புவதற்கும் காரணமாக இருந்துள்ளனர். எனவே, பண்டைய இந்து மதமும் அதன் கலாச்சாரமும் மாலத்தீ வின் உள்ளூர் கலாச்சாரத்தில் அழிக்க முடியாத அளவிற்கு இரண்டறக் கலந்துள்ளன.
ஐரோப்பியக் காலனிய சக்திகள் இந்தியப் பெருங்கடலின் கடல்வழி வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய 16 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, முதலில் போர்த்துக்கீசியர்களும் அவர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்களும் எப்போதாவது பிரஞ்சுக்காரர்களும் மாலத்தீவுகளின் உள்ளூர் அரசியலில் தலையிட்டுள்ளனர். எனினும், 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் பாதுகாப்புக்கு மாலத்தீவு மாறியவுடன் இக்குறுக்கீடுகள் முடிவுக்கு வந்தன. இத்தீவின் முடியாட்சி அரசியலுக்கு முடிவுகட்டி சுயாட்சிக்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.
1965 ஆம் ஆண்டு 26 சூலையில் மாலத்தீவுக்கு முழுமையான சுதந்திரம் ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்தது[1] . எனினும், அவர்கள் 1976 ஆம் ஆண்டுவரை இப்பவளத்தீவின் தென்கோடியில் உள்ள கான் தீவில் தங்களுடைய விமானத் தளத்தை பராமரித்து வந்தனர். மிகப்பெரிய ஒரு பனிப்போரின் உச்சத்தில் ஆங்கிலேயர்கள் 1976 இல் இத்தளத்தை விட்டு வெளியேறினர். கிட்டத்தட்ட இவர்கள் வெளியேறியவுடன் கான விமானத்தளத்தின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் தூண்டப்பட்டன. சோவியத் யூனியன் இவ்விமானத்தளத்தை உபயோகப்படுத்திக் கொள்வதற்காக வைத்த கோரிக்கையை மாலத் தீவு நிராகரித்தது.
1990 களின் தொடக்கத்தில் மாலத்தீவுக் குடியரசின் முன் மிகப்பெரிய சவால் ஒரு தீர்க்கப்பட வேண்டியிருந்தது. மீன் பிடிதொழில், விவசாயம் மற்றும் சுற்றுலா முதலிய மிகக்குறைவான வளங்களில் இருந்து விரைவான பொருளாதார வளர்ச்சியையும் நவீனமாதலையும் உண்டாக்கும் அவசியம் மிகமுக்கியமான பிரச்சினையாக இருந்தது. உத்தேசமாக உயர்ந்து வரும் கடல் மட்ட உயர்வும் தாழ்வான பகுதியில் காணப்படும் இப்பவளத்தீவு எதிர்நோக்கும் அழிவையும் கடந்து நிருபிக்கவும் வேண்டியிருந்தது.
தொடக்க காலம்
[தொகு]அண்டையிலுள்ள இந்தியத் துணைக் கண்டத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மாலத்தீவுக்கு முதன்முதலாக வந்து குடியேறியுள்ளனர். மாலத்தீவினரின் வாய்மொழிச் செய்திகள், மொழியியல் மற்றும் கலாச்சார மரபு மற்றும் சுங்கத்துறை நடவடிக்கைகள் முதலியனவற்றின் ஒப்பீட்டு ஆய்வு முடிவுகள் இக்கருத்துக்கு ஆதாரங்களாக உள்ளன. முதல் மாலத்தீவு குடியேறிகளான இவர்கள் எந்தவிதமான தொல்பொருள் எச்சங்களையும் விட்டுச்செல்லவில்லை[2].
அவர்கள் தங்கள் வீடுகளை மரத்தாலும், பனை மடல்களாலும் மற்றும் பிற எளிதில் மக்கும் பொருட்களாலும் கட்டப்பட்டிருந்தன. வெப்பமண்டல தட்பவெப்ப நிலையில் இவை உப்பு மற்றும் காற்றால் எளிதில் அழிந்துபோயின. இவர்களுடைய தலைவர்கள் அல்லது தலைவரின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டவர்களும் கல்லால் கட்டப்பட்ட அரண்மனைகள், சுற்றுச்சுவர்கள் மற்றும் மத அடையாளங்களான கோயில்கள் முதலியனவற்றை கட்டிக்கொள்ளவில்லை[3]
மாலத்தீவுகளில் பௌத்த இராச்சியம்
[தொகு]பெரும்பாலான வரலாற்றுப் புத்தகங்களில் மாலத்தீவில் பௌத்தமதம் இருந்தது தொடர்பாக சுருக்கமாக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், மாலத்தீவில் பௌத்தமதம் தோன்றி வளர்ந்த 1400 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டிருக்கிறது. தற்பொழுதைய மாலத்தீவுக் கலாச்சாரமும் பௌத்தமும் இணைந்தே மாலத்தீவு வரலாற்றுடன் தழைத்தோங்கின[4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Colliers Encyclopaedia (1989) Vol15 p276 McMillan Educational Company
- ↑ Xavier Romero-Frias, The Maldive Islanders, A Study of the Popular Culture of an Ancient Ocean Kingdom
- ↑ Kalpana Ram, Mukkuvar Women. Macquarie University. 1993
- ↑ Clarence Maloney. People of the Maldive Islands. Orient Longman