இராஜதரங்கிணி
Jump to navigation
Jump to search
இராஜதரங்கிணி எனும் நூல் கி பி 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கல்ஹானர், என்ற இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த காஷ்மீர பண்டிதரால் 1148 -1149 கால கட்டத்தில் சமசுகிருத மொழியில் எழுதப்பட்டது. இராஜதரங்கிணி (மன்னர்களின் ஆறு) எனும் கவிதை நூல், 3449 செய்யுட்களுடனும், எட்டு தரங்கங்கள் (தரங்கம் எனில் அலை) எனும் அத்தியாயங்களுடன் கூடியது. சமசுகிருத கவிதை வடிவில் உள்ள வரலாற்று நூலான இராஜதரங்கிணி ஜம்மு காஷ்மீரின் 12ஆம் நூற்றாண்டின் வரலாற்றை கூறுவதுடன், இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றையும் விவரிக்கிறது. [1][2]
நூலிலுள்ள சில குறிப்புகள்[தொகு]
- கி பி 740-இல் கார்கோட மன்னர்கள் கன்னோசி மன்னர் யசோவர்மனை வீழ்த்தி, துருக்கியர்கள் மற்றும் திபெத்தியர்களை வென்றார்கள் என அறியப்படுகிறது.[3][4]
- இந்திய – பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நீலம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள சாரதா பீடம் கோயில் பற்றி இராஜதரங்கிணி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Rajatarangini of Kalhana- ஜோசப் சுந்தர் தத் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இராஜதரங்கிணி
- Rajatarangini: The Saga of The Kings of Kasmir, ரஞ்சித் சீத்தாராம் பண்டின் மொழிபெயர்த்த இராஜதரங்கிணி
- Rajatarangini and the Making of India's Past, சித்ரலேகா சுஜி வழங்கிய உரையாடல் காணொளி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Stein, Vol. 1, p. 15.
- ↑ "Rajatarangini" Encyclopædia Britannica. Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica Inc., 2011. Web. 17 December 2011.
- ↑ Chadurah & 1991 45.
- ↑ Hasan 1959, பக். 54.