காஷ்மீர பண்டிதர்கள்
சமய சாத்திரங்கள் எழுதும் காஷ்மீர பண்டிதர்கள், ஆண்டு 1890 | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
5,00,000 [1] (ஏறத்தாழ 6,82,000) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
ஜம்மு தில்லி | |
மொழி(கள்) | |
காஷ்மீரி | |
சமயங்கள் | |
காஷ்மீர சைவம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
கவுட சாரஸ்வத் பிராமணர் |
காஷ்மீரி பண்டிதர்கள் (Kashmiri Pandits) எனும் காஷ்மீர பிராமணர்கள்,[2] இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் சமவெளியில் வாழ்ந்த இந்துக்கள் ஆவர்.[3][4][5] காஷ்மீர் பிரிவினைவாதிகளால் தங்களின் உயிருக்கும் உடைமைகளுக்கு அச்சம் ஏற்பட்ட காரணத்தினால், காஷ்மீர் சமவெளியை விட்டு, ஜம்மு, தில்லி போன்ற நகரங்களில் 1985-ஆம் ஆண்டு முதல் அகதிகளாக வாழ்கின்றனர்.
வரலாறு
[தொகு]முகலாயர் ஆட்சியில் அக்பர் பொ.ஊ. 1587-இல் காஷ்மீர் சமவெளியை கைப்பற்றிய பொழுது, காஷ்மீர் பார்ப்பனர்களுக்குப் பண்டிதர் எனும் பட்டத்தை வழங்கியதுடன், வேளாண்மை நிலங்களையும்; அரச பதவிகளையும் வழங்கி கௌரவம் செய்தார்.[6] தில்லி சுல்தானகத்திற்குப் பின் வந்த முகலாயர் ஆட்சியில் பெரும்பான்மையான காஷ்மீர பண்டிதர் இசுலாமிய சமயத்திற்கு மாறினர். எஞ்சியவர்கள் காஷ்மீர சைவ சமயத்தை பின்பற்றி வருகிறார்கள்.[7]
நிகழ்வுகள்
[தொகு]காஷ்மீரிருலிருந்து வெளியேறல் (1985–1995)
[தொகு]இந்தியப் பிரிவினையின் போது உண்டான மதக் கலவரத்தின் போதும், 1950-இல் நிறைவேறிய நிலச்சீர்திருத்த சட்டத்திற்கு பிறகும், பெரும்பான்மையான வேளாண் நில உடமையாளர்களான காஷ்மீர பண்டிதர்களில் 80 விழுக்காட்டினர் தங்கள் உடமைகளை இழந்து காஷ்மீரை விட்டு குடும்பத்துடன் வெளியேறினர்.[8][9] 19 சனவரி 1990 அன்று இரவில் இசுலாமிய அடிப்படைவாதிகளின் வெறியாட்டத்தால்,[10] ஆயிரக்கணக்கான காஷ்மீர பண்டிதர்கள் தங்கள் குடும்பங்களுடன் காஷ்மீர் சமவெளியை விட்டு, ஜம்மு [11] சண்டிகர் மற்றும் தில்லியில் உள்ள முகாம்களில், சொந்த நாட்டில் அகதிகளாக குடிபெயர்ந்தனர்.[12] 1990-ஆம் ஆண்டில் மட்டும் காஷ்மீரிலிருந்து 1,40,000 காஷ்மீர பண்டிதர்களில் சுமார் 1,00,000 பேர் காஷ்மீரை விட்டு அகதிகளாக வெளியேறினார்கள்.[13] வேறு சில குறிப்புகளிலிருந்து 1,50,000 முதல் 3,50,000 பேர் வரை காஷ்மீரை விட்டு வெளியேறியதாக புள்ளி விவரங்கள் உள்ளது.[14][15][16]
பாதுகாப்பு சட்டங்கள் (PRC - JKMIP Acts)
[தொகு]காஷ்மீர பண்டிதர்கள் நிலையாக வாழ்வதற்கு சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்பட்டது.[17][18][19][20]
1997-இல் இயற்றப்பட்ட ஜம்மு காஷ்மீர் புலம்பெயர்ந்தோரின் அசையாச் சொத்துகள் பாதுகாப்புச் சட்டத்தின் படி, காஷ்மீரப் பண்டிதர்கள், காஷ்மீர் சமவெளியில் விட்டுச் சென்ற அசையாச் சொத்துகளை பிறர் விற்கவோ அல்லது உரிமை கொண்டாடவோ முடியாது. மேலும் இச்சட்டத்தை மீறி காஷ்மீர பண்டிதர்களின் நிலங்களை பயன்படுத்துவர்கள் அதற்கான ஈட்டுத்தொகையை, நில உரிமையாளர்களான காஷ்மீரப் பண்டிதர்களுக்கு செலுத்த வேண்டும்.[21]
சமூக - அரசியல் அமைப்புகள்
[தொகு]காஷ்மீரிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட காஷ்மீர பண்டிதர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தங்களுக்கென தனி தன்னாட்சி பகுதியை நிறுவித்தர பனூன் காஷ்மீர் இயக்கத்தை நடத்தி வருகிறார்கள்.[22] தங்களை காஷ்மீரில் மறு குடியமர்த்தவும், காஷ்மீரை விட்டு தங்களை விரட்டியடிக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான காஷ்மீரப் பண்டிதர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரிக்கக் கோரி போராட்டங்கள் மூலம் இந்திய அரசிடம் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.[23][24][25]
காஷ்மீரப் பண்டிதர்களின் போராட்ட அமைப்புகள்:
- பனூன் காஷ்மீர்
- அகில இந்திய காஷ்மீரி சமாஜம் (AIKS)
- அகில இந்திய காஷ்மீரி பண்டிதர்கள் மாநாடு
- காஷ்மீரி சமதி
படக்காட்சியகம்
[தொகு]-
சூரிய மார்த்தாண்டன் கோயில், காஷ்மீர்
-
ஹர்முக் மலை
-
சாராதா பீடம்
-
காஷ்மீரப் பண்டிதரின் மனைவி, ஆண்டு 1922
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/protest-against-biased-reporting-on-human-rights-in-kashmir/article1179114.ece
- ↑ Duchinsky, Haley (26 September 2013). "Survival is now our Politics: Kashmiri Hindu community identity and the Politics of Homeland". www.academia.edu.
- ↑ Lyon, Peter (2008). Conflict between India & Pakistan: An Encyclopedia. p. 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781576077122.
- ↑ Essa, Assad (2 August 2011). "Kashmiri Pandits: Why we never fled Kashmir". aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 15 August 2012.
- ↑ Kashmir and It's People: Studies in the Evolution of Kashmiri Society. p. 183.
- ↑ Bakshi, S.R. (1997). Kashmir:History & People. Sarup & Sons. p. 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185431965. பார்க்கப்பட்ட நாள் 8 July 2012.
- ↑ Kaw, M.K. (2004). Kashmir & Its People: Studies in the evolution of Kashmiri society. APH Publishing House. p. 183. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8176485373.
- ↑ Zutshi 2003, ப. 318
- ↑ K Pandita, Rahul (2013). Our Moon has Blood Clots: The Exodus of the Kashmiri Pandits. Vintage Books / Random House. pp. 255. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184000870. பார்க்கப்பட்ட நாள் 23 June 2013.
- ↑ காஷ்மீர் பண்டிட்கள் வரலாறு: தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற நேர்ந்த அந்த இரவின் கதை
- ↑ "BBC World Service | World Agenda - Give me land". Bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2013-03-28.
- ↑ Tej Kumar Tikoo, Kashmiri Pandits offered three choices by Radical Islamists, India Defence Review, 19 January 2015.
- ↑ Bose 1997, ப. 71, Rai 2004, ப. 286,Metcalf & Metcalf 2006, ப. 274
- ↑ Malik 2005, ப. 318
- ↑ Madan 2008, ப. 25
- ↑ https://books.google.com/books?id=3vBIxiC4pwcC&pg=PA25&dq=350,000+kashmiri+pandits&hl=en&sa=X&ved=0CDsQ6AEwBmoVChMIhZD5tvL5yAIVA4qUCh0bygi5#v=onepage&q=350%2C000%20kashmiri%20pandits&f=false
- ↑ http://jkmigrantrelief.nic.in/zone_dir.aspx
- ↑ http://jkmigrantrelief.nic.in/ord_and_circu.aspx
- ↑ "Recommendations of Koul Committee" (PDF). Archived from the original (PDF) on 23 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 21 May 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-07-23. பார்க்கப்பட்ட நாள் 2016-05-31.
- ↑ "The Jammu Jammu And Kashmir Gazette" (PDF). Archived from the original (PDF) on 23 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 21 May 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Pandits to float Political Party". The Hindustan Times. 2 January 2007. Archived from the original on 5 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 September 2013.
- ↑ "Kashmiri pandit team to visit valley to negotiate for peace". The Indian Express. 16 May 2000. பார்க்கப்பட்ட நாள் 26 September 2013.
- ↑ காஷ்மீரில் மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு புலம் பெயர்ந்த பண்டிட்கள் வலியுறுத்தல்
- ↑ படுகொலை வழக்குகளை மீண்டும் விசாரிக்கக் கோரி காஷ்மீர் பண்டிட்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்
வெளி இணைப்ப்புகள்
[தொகு]- "Roots In Kashmir" an initiative launched by the Kashmiri Pandit Youth
- காஷ்மீரி பண்டிதர்கள் வெளியேற்றம் - உறைய வைக்கும் உண்மைகள் -காணொலி
- காஷ்மீர் இந்துக்கள், சீக்கியர்களுக்கு அச்சமூட்டும் தொடர் கொலைகள் - வரலாறு திரும்புகிறதா?
- காஷ்மீர் பண்டிட்டுகளின் கதை - காணொளி
- தனித் தாயகம் கேட்கும் காஷ்மீர் பண்டிட்கள். இந்திய அரசுக்கு புதிய தலைவலி.
- காஷ்மீர் பண்டிட்டுகளின் கதை
- Shehjar News Magazine
- Kashmiri Overseas Association, Inc. (KOA), USA
- Kashmir Hindu Foundation (KHF)
- Kashmir-information.com
- Indo-American Kashmir Forum – a U.S. based political advocacy group for the Kashmiri Pandits
- Panun Kashmir: A Homeland for Kashmiri Pandits
- Video Documentary 'Lost Paradise' on RefugeeCamps of Kashmiri Hindus by Deepak Ganju
- 'God of Small Things,' Travelogue in The Indian Express, 5 March 2006, by Arjun Razdan
- Kashmiri Pandit association of Europe