அமர்நாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமர்நாத்
பெயர்
பெயர்:அமர்நாத்ஜி குடைவரை கோயில்
அமைவிடம்
அமைவு:அமர்நாத், ஜம்மு காஷ்மீர்,  இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அமர்நாத் (சிவன்)
வரலாறு
அமைத்தவர்:அமர்நாத் பாபா
புனித குடைவரையில் பனிக்கட்டி உருவில் சிவலிங்கம்

அமர்நாத் குடைவரைகள் (Amarnath caves; இந்தி: अमरनाथ गुफा) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய இந்துக் குடைவரை கோயில் ஆகும். இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் இந்து புராண காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது[1].

அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது[2]. இந்த லிங்கமானது சந்திரனின் வளர், மற்றும் தேய் காலங்களுக்கு ஏற்ப உரு மாறுவதாக குறிப்பிடப்படுகிறது[3].

இந்துப் புராணங்களின் படி இங்கு தான் சிவன் வாழ்வின் இரகசியங்களை பார்வதிக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது[4]. பார்வதி, மற்றும் பிள்ளையார் பனிச்சிலைகளும் இங்கு உள்ளன.

இக்குகை 3,888 மீட்டர் உயரத்திலும்[2], ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களுக்கு இலக்காகலாம் என்ற காரணத்தினால் இக்கோயில் இந்திய இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளது[5]. எனவே இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல வேண்டும்.

இந்த இடம் 51 சக்தி பீடங்களில் தேவியின் தொண்டைப் பகுதி விழுந்த இடமாகும்.

படத்தொகுப்பு[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "New shrine on Amarnath route". The Hindu. 2005-05-30 இம் மூலத்தில் இருந்து 2007-06-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070618193352/http://www.hindu.com/2005/05/30/stories/2005053009340300.htm. 
  2. 2.0 2.1 "Amarnathji Yatra - a journey into faith". Official Web Site of Jammu and Kashmir Tourism. Archived from the original on 2006-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-06-28.
  3. Ortner, Jon. On the road again பரணிடப்பட்டது 2006-10-17 at the வந்தவழி இயந்திரம். PDN Gallery.
  4. "Amarnath Cave - The legend". Bhole Bhandari Charitable Trust.
  5. http://news.bbc.co.uk/2/hi/south_asia/2176165.stm

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்நாத்&oldid=3541242" இலிருந்து மீள்விக்கப்பட்டது