பார்வதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பார்வதி
WLA lacma Hindu Goddess Parvati Orissa.jpg
கௌரி
சக்தி அதிபதி
தேவநாகரி पार्वती
சமசுகிருதம் Pārvatī
வகை மூதேவிகள், ஆதி பராசக்தி, தேவி, ஆதி சக்தி, சக்தி, புவனேஸ்வரி
இடம் கயிலை
மந்திரம் ஓம் பகவதே பார்வதி நமஹ
ஆயுதம் சூலம், வாள்
துணை சிவன்

பார்வதி (தேவநாகிரி: पार्वती) என்பவர் சிவபெருமானை திருமணம் செய்து கொள்ள ஆதிசக்தியின் எடுத்த அவதாரங்களுள் ஒருவராவார். சிவபெருமானை பிரிந்த ஆதிசக்தி மீண்டும் சிவபெருமானை அடைவதற்காக தட்ச பிரஜாபதியின் மகளான தாட்சாயிணியாக அவதரித்தார். அப்பிறவியில் சிவபெருமானை கணவனாக அடைந்தும், அவருடன் சேர்ந்து வாழ இயலாமல் யாகத்தில் தன்னை மாய்த்துக் கொண்டார். பிறகு பர்வதராஜன் மைனாகுமாரி தம்பதிகளின் மகளான பார்வதியாக அவதாரம் செய்தார். பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் மூலமாக சிவபெருமானை திருமணம் செய்து முருகன், விநாயகன் போன்றவர்களின் தாயாகிறார். சிவபெருமான் பார்வதி தம்பதியினருக்கு ஜாம்பவான் என்ற மகனும், அசோக சுந்தரி என்ற மகளும் இருப்பதாக சில புராணங்கள் கூறுகின்றன. ஆதிசக்தியின் வடிவில் பார்வதி தேவியே அன்னை வடிவமானவர்.

இவர் சிவபெருமான் மற்றும் முருகன், விநாயகன் ஆகியோடு இருக்கும் சிலைகளில் இரு கைகளோடும், தனிச்சிற்பங்களில் நான்கு கைகளோடும் காணப்படுகிறார். வைணவக் கடவுளான திருமாலின் தங்கையாக இருப்பதால், திருமாலைப் போன்றே சங்கு சக்கரம் ஏந்திய பின்னிருகைகளையும் உடைவர். தனித்த அவதாரங்களில் எட்டு கைகள் கொண்டும், எண்ணற்ற கைகள் கொண்டும் காணப்படுவதுண்டு.

பார்வதி தேவி தன்னுடைய மகன்களுடன் 1872,0701.54 .

சொல்லிணக்கணம்[தொகு]

பர்வதம் என்ற வடமொழி சொல்லானது மலையைக் குறிக்கின்ற சொல்லாகும். ஹிமயவான் (பர்வதராஜன்) என்ற மலைகளின் மன்னின் மகளாக பிறந்தமையால், மலைமகள் (மலைகளின் மகள்) என்றும் சைலஜா (மலைகள் மகள் என்பதன் வடமொழி வடிவம்) என்றும், ஹிமயவதி (ஹிமயவனின் மகள்), கிரிஜா - கிரிஜபுத்ரி (மலையரசன் மகள்) என்றும் அழைக்கப்படுகிறார். பார்வதி என்ற சொல்லானது பவித்ரா (புனிதமானவள் (அ) மாசற்றவள்) என்பதிலிருந்து பிறந்திருக்கிறது.

துர்கா, சக்தி, அம்பிகா, கௌரி, பைரவி, காளி, உமா, லலிதா, மாதாஜி, சஹானா, மகேஸ்வரி, பவானி, சீறீதேவி, சிவராணி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்களின் அழைக்கப்படுகிறார். இந்த ஆயிரம் பெயர்களின் தொகுப்பு லலிதா சகஸ்கிராமம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதி&oldid=1813996" இருந்து மீள்விக்கப்பட்டது