அங்காளபரமேசுவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அங்காளம்மன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அங்காளம்மன்
அங்காளபரமேசுவரி/அங்காளம்மன்
வேறு பெயர்கள்
  • அங்காள தேவி
  • அங்காள பரமேஸ்வரி
  • அங்காள ஈஸ்வரி
  • தாண்டேஸ்வரி
  • பூங்காவனத்து அம்மன்
  • பெரியாயி
  • பெரியாண்டிச்சி
  • பேச்சியாயி
இடம்மேல் மலையனூர்
ஆயுதம்சூலம் , உடுக்கை, கத்தி , கபாலம்

அங்காளம்மன் என்பவர் அங்காளஈஸ்வரி அல்லது அங்காளபரமேஸ்வரி என்று அழைக்கப்படுகிறார். இவர் இந்து சமய பெண் தெய்மான பார்வதியின் அம்சமாவார். இவர் முதன்மையாக தென்னிந்தியாவின் கிராமங்களில் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார். இவர் பெரும்பாலும் சப்தகன்னியர் ஒருவரின் அம்சமாக கருதப்படுகிறார்.[1]

தொன்மம்[தொகு]

பிராந்திய நாட்டுப்புற நம்பிக்கையின்படி வல்லாள கண்டன் எனும் அரக்கன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். இந்திரன் வருணன் போன்ற தேவர்கள் வல்லாள கண்டனுக்கு எந்த வரத்தையும் அளிபக்கவேண்டாம் என்று சிவனை வேண்டினர். ஆனாலும் வல்லாள கண்டனின் தவத்தை மெச்சி அவனுக்கு இரு வரங்களை அளித்தார். அந்த வரங்களைக் கொண்டு முனிவர்களையும், தேவர்களை அரக்கன் துன்புறுத்தினான். இவன் கொடுமையைத் தாங்காத முனிவர்கள் பார்தியிடம் முறையிட்டனர். சிவன் அரக்கனைக் கொல்ல பார்வதிக்கு வரமளித்தார். இதன் பிறகு தேவி அங்காளம்மன் என்ற உருவமெடுத்து அசுரனை வதம் செய்ய வந்தாள். அசுரன் தேவிக்கு அஞ்சி சுடுகாட்டில் தஞ்சமடைந்தான். தேவின் கோபத்தில் இருந்து தப்பிக்க ஒரு பிணத்தினுள் புகுந்துகொண்டான். ஆனாலும் அந்த அசுரனை தேவி வதம் செய்தாள். பின்னர் அவனின் எலும்புகளை இடுப்பில் கட்டிக் கொண்டு ஆனந்த தாண்டவம் ஆடினாள்.[2]

கோயில்கள்[தொகு]

  • ஸ்ரீ அங்காள ஈஸ்வரி கோவில், முன்னிலைக் கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்
  • மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில்
  • ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், பருத்திப்பள்ளி,நாமக்கல்
  • அருள்மிகு குருநாதன்-அங்காளபரமேஸ்வரி கோவில்,

தெப்பம் தெற்கு ரதவீதி,விருதுநகர்

  • அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயம், அண்ணா நகர், விளார் சாலை, தஞ்சாவூர்
  • அங்காள பரமேஸ்வரி கோவில், வைசியாள்வீதி, கோயமுத்தூர்
  • அங்காளபரமேஸ்வரி அம்மன்கோவில் குருவராஜப்பேட்டை, அரக்கோணம்
  • அங்காளம்மன் திருக்கோவில், குமாரபாளையம், சத்தியமங்கலம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர், விழுப்புரம் மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், காங்கேயன்குப்பம்,கடலூர் மாவட்டம்
  • அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயம், அண்ணா நகர், விளார் சாலை, தஞ்சாவூர்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், புட்லூர், திருவள்ளூர் மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், சூளை, சென்னை.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், ராயபுரம் கல்மண்டபம், சென்னை.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், சென்ட்ரல், சென்னை.
  • அருள்மிகு அங்காளபரமேசுவரி அன்னபூரணி திருக்கோயில், சி.பி.ரோடு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், பரங்கிபேட்டை, கடலூர் மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், முத்தனாம் பாளையம், திருப்பூர் மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், காட்டுமன்னார்கோயில், கடலூர் மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், சூரக்குழி, ஆண்டிமடம் அருகே, அரியலூர் மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கோடாலிகருப்பூர், கும்பகோணம், தஞ்சை மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், வானாதிராஜபுரம், கடலூர் மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், துறையூர், திருச்சி மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், திருப்பனிபேட்டை, திருவிடைமருதூர், தஞ்சை மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கோட்டூர், திருவாரூர் மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கூவத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், வேளுக்குடி, திருவாரூர், தஞ்சை மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், அச்சுதம்பேட்டை, திருவாரூர், தஞ்சை மாவட்டம்.
  • அங்காளபரமேசுவரி ஆலயம்,கொல்லுமாங்குடி, திருவாரூர் மாவட்டம்
  • அங்காளபரமேஸ்வரி ஆலயம், மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டம்.
  • அங்காளபரமேஸ்வரி ஆலயம், குருவராஜப்பேட்டை, இராணிப்பேட்டை மாவட்டம்.
  • அங்காளபரமேஸ்வரி ஆலயம், தேவபாண்டலம், சங்கரபுராம் வட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம்
  • ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம், அப்பாசாமி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை
  • ஸ்ரீ அருள்மிகு அங்காளம்மன் ஆலயம், மேல்மங்கலம்,பெரியகுளம் வட்டம், தேனி மாவட்டம்.
  • ஸ்ரீ அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஆலயம், சாலியமங்கலம்,தஞ்சாவூர் மாவட்டம்.

பிற நாடுகளில் உள்ள கோயில்கள்[தொகு]

  • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கோலா செலங்கோர், மலேசியா.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்காளபரமேசுவரி&oldid=3916180" இலிருந்து மீள்விக்கப்பட்டது