காளிதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காளிதாசர்
தொழில் கவிஞர்
நாடு இந்தியன்
இலக்கிய வகை சமசுகிருத நாடகங்கள், இலக்கியங்கள்
கருப்பொருட்கள் காவியம், நாடகங்கள், புராணங்கள்,
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
சாகுந்தலம், இரகுவம்சம், மேகதூதம், குமாரசம்பவம், விக்கிரமோர்வசியம், மாளவிகாக்கினிமித்திரம்


காளிதாசன் (தேவநாகரி: कालिदास) சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர், நாடகாசிரியர். இவரது சாகுந்தலம், மேகதூதம், இரகுவம்சம், குமாரசம்பவம், மாளவிகாக்கினிமித்திரம் , விக்கிரமோர்வசியம் ஆகியவை இந்திய மொழிகளின் இலக்கியங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. இவர் குப்தரகளின் காலத்தில் வாழ்ந்த ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். [1]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

காளிதாசன் இந்தியத் துணைக்கண்டத்தில் அமைந்துள்ள இமயமலையின் அருகிலும், மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமான உஜ்ஜைனிலும், மற்றும் தற்கால ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பகுதிகளில் இருந்த கலிங்க நாடு போன்ற பல்வேறுப் பகுதிகளில் வாழ்ந்ததாக அறிஞர்கள் ஊகிக்கின்றனர்.[2]

மேற்காணும் இந்த தகவல்கள், காளிதாசன் சமசுகிருத மொயில் இயற்றிய காவியக் கவிதையான குமாரசம்பவம் எனும் நாடகக் கவிதையில், இமயமலைத் தொடர்களையும் காளிதாசரின் விரிவான விளக்கத்தையும் அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும், அவர் உஜ்ஜைனை ஆழமாக நேசித்த அன்பின் காட்சிகளாக, அவர் இயற்றிய மேகதூதம், மற்றும் இரகுவம்சம் எனும் காவியங்களில் மிகுந்த விளக்கங்கள் காணப்படுகின்றன.[3]

காசுமீர் பண்டிதரும், சமசுகிருத அறிஞருமான "லட்சுமி தார் கல்லா" (1891 - 1953) என்பவர், 1926 இல் காளிதாசாவின் பிறப்பு என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார், அது காளிதாசனின் பிறப்பிடத்தை அவரது எழுத்துக்களில் அடிப்படையாகக் கொண்டது. மேலும் அவர் காளிதாசர் காசுமீரில் பிறந்தார் என்றும், ஆனால் தென்திசை நோக்கிச் சென்று உள்ளூர் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற முயன்றதாகவும் கூறப்படுகிறது.[4][5][6]

  • உஜ்ஜைன் மற்றும் கலிங்காவில் அல்லாத, காசுமீரில் காணப்படும் தாவரம் மற்றும் விலங்கினங்களின் விவரம்: குங்குமப்பூ செடிகள், தேவதாரு மரங்கள், கத்தூரி மான் போன்றவை.
  • காசுமீரில் பொதுவான புவியியல் அம்சங்களின் விவரம்: மலையின் மீதுள்ள சிறிய ஏரிகள், காட்டிடைவெளிகள் முதலியன.
  • கல்லாவின் படி, காசுமீர் இடங்களில் அடையாளம் காணக்கூடிய சில முக்கிய தளங்களைக் குறிப்பிடலாம். இதுபோன்ற தளங்கள் காசுமீருக்கு வெளியே மிகவும் பிரபலமானவை அல்ல, எனவே, காசுமீருடன் நெருங்கிய தொடர்பில்லாதவர் ஒருவருக்குத் தெரிந்திருக்க முடியாது.
  • காசுமீரி வம்சத்தின் சில புராணக் குறிப்புகளில், நகும்பா (காசுமீர் உரை நீலமாத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது) போன்றவை; காசுமீர் ஒரு ஏரியிலிருந்து உருவாக்கப்படுவது பற்றிய புராணக்கதை (சகுந்தலாவில்) குறிப்பிடப்பட்டுள்ளது. நிலாடா புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த புராணக் கதை, அனந்தா எனும் பழங்குடித் தலைவர், ஒரு பேயைக் கொல்ல ஒரு ஏரியை வடிகட்டி வைத்தார் என கருதப்படுகிறது. அனந்தா எனும் முன்னாள் ஏரி (இப்போது நிலம்) "காசுமீர்" என்று பெயரிடப்பட்டது, அவரது தந்தை காஷியாபாவுக்குப் பிறகு என்பது குறிப்பிடத்தக்கது.
  • கல்லாவின் கூற்றுப்படி, சகுந்தலா பிராட்டியப்சினா தத்துவத்தின் (காசுமீர சைவம் ஒரு கிளை) ஒரு உருவகமான நாடகமாகும். அந்தக் கிளை, அந்த காலகட்டத்தில் காசுமீருக்கு வெளியே தெரியவில்லை என்று கல்லா மேலும் மேலும் வாதிடுகிறார்.[7]

நாட்டுப்புறக் கலைகளின்படி, காளிதாசன் முதலில் ஒரு அறிவார்ந்த நபராகவும், மற்றும் ஒரு இளவரசியை திருமணம் செய்துகொண்டவராகவும் சித்தரிக்கப்படுகிறார். அவரது மனைவியின் சவாலின் காரணமாக, அவர் ஒரு பெரிய கவிஞராக உருவானதாகவும், மற்றொரு புராணக்கதையின்படி அவர், சிலோன் என அழைக்கப்பட்ட இலங்கையில் குமரதாசனாக விசயம் செய்தார் எனவும், சில துரோகத்தின் காரணமாக காளிதாசன் கொலை செய்யப்பட்டார் என்றும் கருதப்படுகிறது.[8]

காலம்[தொகு]

காளிதாசன்; இந்தியாவின் புராணக்கதையில் வரும், உஜ்ஜெய்னி நாட்டின் அரசரான விக்ரமாதித்தியன் என்பவரின் கவிஞனாக இருந்ததாக பல பண்டைய, மற்றும் இடைக்கால நூல்கள் கருதுகின்றன. விக்ரமாதித்தியன் என்ற புகழ்பெற்ற அரசர், கி. மு. 1 ஆம் நூற்றாண்டில், மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமான உஜ்ஜெய்னியை ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது. அந்த புகழ்பெற்ற விக்ரமாதித்தியன், ஒரு வரலாற்றுப் பெயர் அல்ல என்று ஒரு பகுதியினர் அறிவர். உஜ்ஜைனை ஆட்சி செய்த விக்ரமாதித்தியன், மற்றும் மற்ற அரசர்களான, இரண்டாம் சந்திரகுப்தர் (கி.மு 380 - 415) மற்றும் யசோதர்மன் (கி.மு. 6 ஆம் நூற்றாண்டு) ஆகியோர்கள் ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கவை.[9]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிதாசன்&oldid=2396142" இருந்து மீள்விக்கப்பட்டது