உள்ளடக்கத்துக்குச் செல்

சூத்திரகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூத்திரகர் (Shudraka) (IAST: Śūdraka) பரத கண்டத்தில் கிபி நான்காம் நூற்றாண்டில், உஜ்ஜைன் நாட்டை ஆண்ட மன்னரும், சமஸ்கிருத மொழி நாடக ஆசிரியரும் ஆவார்.[1][2] மன்னர் சூத்திரகர், மிருச்சகடிகம் _ (மண்ணியல் சிறுதேர் - The Little Clay Cart), வினவாசவத்தை (Vinavasavadatta), பாணர் (bhana) (short one-act monologue), மற்றும் பத்மபிரபிரித்தகா (Padmaprabhritaka).[2] போன்ற சமஸ்கிருத நாடகங்களை இயற்றியவர் ஆவார்.[3]

மனித உறவுகளின் உன்னதங்களைக் கிளர்ந்தெழத்தூண்டும் " மிருச்சகடிகம்" நாடகம், மன்னர் சூத்திரகரால் கிபி நான்காம் நூற்றாண்டில் இயற்றபப்ட்டது.[4]

சூத்திரகரின் சிறப்புகள்

[தொகு]

மன்னர் சூத்திரகர் அஸ்வமேத யாகத்தை முடித்து, தமது 110வது வயதில், தன் மகனுக்கு முடிசூட்டியப் பின்னர் காடுறை வாழ்க்கை மேற்கொண்டவர். சூத்திரகர் ரிக் வேதம், சாம வேதம், கணக்கியல், காமசாஸ்திரம் கற்றதுடன், காட்டு யாணைகளை பிடித்து, பயிற்சி அளித்து, அவைகளை யாணைப்படையில் சேர்க்கும் கலையை அறிந்தவர் .[5]

சூத்திரகர் இயற்றிய மிருச்சகடிகம் எனும் நூல் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டும், நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது. சங்கரதாஸ் சுவாமிகள் மிருச்சகடிக நாடகத்தை தமிழில் அரங்கேற்றியுள்ளார்.

இந்தியவியல் அறிஞரான பார்லே பி. ரிச்சர்டு, சூத்திரகர் என்பது தொன்மவியல் பெயராக இருக்கும் என்றும், மிருச்சகடிக நாடக நூலின் ஆசிரியர் இதுவரை எவராலும் அறியப்படவில்லை எனக் கூறுகிறார்.[5] கிபி மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈஸ்வரதாசின் தந்தையான இந்திராணி தத்தா அல்லது சிவதத்தன் எனும் ஆபிர நாட்டு மன்னரின் புனை பெயரே சூத்திரகர் எனச் சில பண்டைய வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.[6][7]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Śūdraka INDIAN DRAMATIST
  2. 2.0 2.1 Banerjee, Biswanath (1999). Shudraka. Makers of Indian Literature. New Delhi, India: Sahitya Academy. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-260-0697-8.
  3. Bhattacharji, Sukumari History of Classical Sanskrit Literature, Sangam Books, London, 1993, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86311-242-0, p.93
  4. The little clay cart (Mrcchakatika) a Hindu drama, attributed to King Shudraka; translated from the original Sanskrit and Prakrits into English prose and verse
  5. 5.0 5.1 Farley P. Richmond (1993). Indian Theatre: Traditions of Performance. Motilal Banarsidass. pp. 55–57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120809819.
  6. Warder, Anthony Kennedy (1990). "Chapter XX: Drama in the +3 ; Śūdraka; Contemporary Lyric Poetry". Indian Kāvya Literature, Volume 3 (second ed.). Delhi: Motilal Banarsidass. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0448-1.
  7. Banerjee 1999, ப. 9 citing Konow, Sten (1920). Das Indische Drama (in German). Berlin: Walter de Gruyter. p. 57.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)

மேற்கோள்கள்

[தொகு]
  • Ryder, Arthur William. Translator. The Little Clay Cart (Mrcchakatika): A Hindu Drama attributed to King Shudraka, Cambridge, Ma: Harvard University Press, 1905.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூத்திரகர்&oldid=4057371" இலிருந்து மீள்விக்கப்பட்டது