சங்கரதாஸ் சுவாமிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சங்கரதாஸ் சுவாமிகள்

சங்கரதாஸ் சுவாமிகள் (1867 - 13 நவம்பர் 1922) தமிழ் எழுத்தாளர், நடிகர், நாடக ஆசிரியர், பாடலாசிரியர் மற்றும் நாடக தயாரிப்பாளர் ஆவார். இவர் எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பால், எம்.ஆர். ராதா, எஸ்.வி. வெங்கடராமன்,கே. சாரங்கபாணி. போன்ற தமிழ் கலைஞர்களை  அறிமுகப்படுத்தினார்.  சங்கரதாஸ் ஸ்வாமிகள்  தமிழ் நாடகத்தின் முன்னோடியான  பம்மல் சம்பந்த முடலியாருடன்  ஒருவராக கருதப்படுகிறார். 

ஆரம்ப வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

சுவாமிகள்  தூத்துக்குடியில்  1867 ஆம் ஆண்டு தாமோதரன் பிள்ளைக்கும்  கந்திமதி அம்மாளுக்கும்  மகனாகப் பிறந்தார். அவர் உப்பு தொழிற்சாலை ஒன்றில் கணக்காளராகப் பனியில் சேர்வதற்கு முன்னர்,  தன்    தந்தை மற்றும்  பழனி  தண்டபாணி சுவாமிகளிடம்   கல்வி  கற்றார். 


தொழில்[மூலத்தைத் தொகு]

சுவாமிகள் 1898 ஆம் ஆண்டு தனது இருபத்தி நான்காவது வயதில் வேலையை விட்டு வெளியேறினார், பின்னர்  தமிழ்  வெண்பாக்களை  எழுதுவதில் மிகுந்த  ஆர்வமுடையவராகக்  காணப்பட்டார். ராமுடு அய்யர், கல்யாணராம அய்யர் ஆகிய இருவரும் இணைந்து  நடத்திய நாடகசபையில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சிறிது காலத்திற்குப் பின் சுவாமிகள்  சாமி  நாயுடுவின் நாடக நிறுவனத்தில் சேர்ந்தார்.

மான்பூண்டியா  பிள்ளையின் வலியுறுத்தல் மற்றும் அவர் தந்த உற்சாகத்தால்,சுவாமிகள் மீண்டும்  நாடகங்கள் எழுதத் தொடங்கினார். அவரது முதல் வெற்றி பம்மல் சம்பந்த முதலியாரின்  மனோகரா நாடகத்திற்குப் பாடல்கள்  எழுதியதாகும்.

குறிப்புகள்[மூலத்தைத் தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கரதாஸ்_சுவாமிகள்&oldid=2341197" இருந்து மீள்விக்கப்பட்டது