உள்ளடக்கத்துக்குச் செல்

வாசவதத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாசவதத்தை [1] பெருங்கதை காப்பியத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருத்தி. இவளது தந்தை பிரச்சோதனன். தாய் பதுமகாரிகை. பெருங்கதை நூலின் காப்பியத் தலைவன் உதயணனின் முதல் மனைவி. இந்திரன் அருளால் பதுமகாரிகை வயிற்றில் பிறந்தவள். இந்திரனைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று வாசவன். தத்தை என்னும் சொல் கிளியைக் குறிக்கும். வாசவனுக்குப் பிறந்த கிளி போன்ற பெண் என்ற முறையில் இவளுக்கு வாசவதத்தை என்னும் பெயரைச் சூட்டினர்.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40. {{cite book}}: Check date values in: |year= (help) உ.வே.சா. எழுதிய உதயணன் சரித்திரச் சுருக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசவதத்தை&oldid=1839608" இலிருந்து மீள்விக்கப்பட்டது