ருது சம்ஹாரம்
ருது சம்ஹாரம் (Ṛtusaṃhāra often written Ritusamhara),[1] (தேவநாகரி: ऋतुसंहार; ऋतु ṛtu, "பருவங்கள்"; संहार saṃhāra, "தொகுப்பு") இந்நூல் சமசுகிருத கவிஞர் காளிதாசரின் புகழ்பெற்ற முதல் கவிதைப் படைப்பாகும்[2]. இது நீண்ட சமசுகிருத மொழியின் செய்யுள் காவியம் ஆகும். ஆறு தொகுதிகள் கொண்ட ருது சம்ஹாரம் நூல், மாறிவரும் பருவங்களுக்கு ஏற்ப காதலர்கள் வினையாற்றுவது சித்தரிக்கப்படுகிறது.[1]
ஆறு காண்டங்கள் கொண்ட இப்படைப்பில் கோடை முதல் வசந்த காலம் வரையிலான ஆறு பருவங்களை சித்தரிக்கும் இயற்கையின் அழகிய வர்ணனைகளை வழங்குகின்றன[3] . ஜோயல். ஜெ. நோபல் (Joel J. Nobel ) மற்றும் பேராசிரியர் ஏ.பி. கீத் ஆகியோர் தங்கள் எழுத்துகளில் ரிது சம்ஹாரத்தை காளிதாசரின் உண்மையான மற்றும் முதல் படைப்பாக நிறுவியுள்ளனர்.
காளிதாசர் படைத்த காவியங்களில், ருது சம்ஹாரம் காலத்தால் முந்தியது என வட மொழி இலக்கியவாதிகள் கருதுகின்றனர்.[4] இந்நூலை பருவங்களின் மாலை என்றும் அழைப்பர். இந்நூலில் இளம் காதலர்களின் சிற்றின்ப காதலை வெளிப்படுத்தும் சிருங்கார ரசம் அதிக அளவில் உள்ளது.[5]
பருவங்கள்
[தொகு]சித்திரை, வைகாசி மாதங்களின் வசந்த ருது (இளவேனில் காலம்), ஆனி, ஆடி மாதங்களுக்கான கிருஷ்ம ருது, (முதுவேனில்காலம்), ஆவணி மற்றும் புரட்டாசி மாதங்களுக்கான வர்ச ருது (மாரிகாலம்), ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களுக்கான சரத் ருது (கூதிர்காலம்), மார்கழி மற்றும் தை மாதங்களுக்கான ஹேமந்த ருது (முன்பனிக்காலம்), மாசி மற்றும் பங்குனி மாதங்களுக்கான சிசிர ருது (பின்பனிக்காலம்) எனும் ஆறு இந்தியப் பருவங்களை கவிதை நயத்துடன் ருது சம்ஹாரம் நூல் விளக்குகிறது.[6].
தழுவல்கள்
[தொகு]நாடக எழுத்தாளரும், இயக்குனருமான ரத்தன் தியாம் என்பவர், 2002ல் நான்காவது பாரத வர்ணப் பெருவிழாவின் போது, காளிதாசரின் ருது சம்ஹாரம் காவியத்தை தழுவி ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.[7]
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ருதுசம்ஹாரம் முதன்முதலில் கொல்கத்தாவில் 1792ல் சர் வில்லியம் ஜோன்சால் திருத்தப்பட்டது[6][8]. 1840ஆம் ஆண்டில் பி. வான் போயிலன் என்பவரால் இலத்தீன் மற்றும் ஜெர்மன் மொழிபெயர்ப்புகளுடன் மற்றொரு பதிப்பு வெளியிடப்பட்டது. 1906 ஆம் ஆண்டில் மணிராமின் சமஸ்கிருத விளக்கவுரையுடன் நிர்ணயசாகர் பிரஸ் இந்த படைப்பை வெளியிட்டது. ருது சம்ஹாரம் காவியத்தை முதன் முதலில், தமிழ் மொழியில் தி. சதாசிவ ஐயர் என்பவர் 1950ல் தமிழ் மொழியில் எழுதி வெளியிட்டுள்ளார். இக்காவியம் ஆங்கிலம், இந்தி, மராத்தி, தெலுங்கு, வங்காள மொழி மற்றும் கன்னட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Ritusamhara, transl. Manish Nandy, Dialogue Publications, Calcutta, 1970
- ↑ Lienhard, Siegfried (1984). A History of Classical Poetry: Sanskrit, Pali, Prakrit (A History of Indian Literature Vol. III), pp. 107-108. Otto Harrassowitz, Wiesbaden.
- ↑ "Monier-Williams Sanskrit Dictionary 1899 Basic".
- ↑ http://www.sanskrit-lexicon.uni-koeln.de/monier/
- ↑ Kalidasa, K. Krishnamoorthy, Sahitya Akademi 1994
- 1 2 Ritusamhara Or The Peageant Of The Seasons, R. S. Pandit, https://archive.org/details/in.ernet.dli.2015.525197
- ↑ Kavita Nagpal (16 April 2002). "BHARAT RANG MAHOTSAV : A RETROSPECTIVE". Press Information Bureau (Govt. of India).
- ↑ Cannon, Garland Hampton (1979). Sir William Jones a bibliography of primary and secondary sources. [1007 HA] Amsterdam, [postbus 52519]: Benjamins. p. 38. ISBN 1-283-35985-5. கணினி நூலகம் 1241742513.
{{cite book}}: CS1 maint: location (link)
வெளி இணைப்புகள்
[தொகு]- Transliterated text பரணிடப்பட்டது 2007-06-09 at the வந்தவழி இயந்திரம்
- Online literal translation by Desiraju Hanumanta Rao
- The Seasons, selected verses translated into English verse by Arthur W. Ryder
- Ritusamhaaram
- Full text of "Kalidasa Krishnamoorthy K. Sahitya Akademi"