உள்ளடக்கத்துக்குச் செல்

தூது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூது என்பது ஒருவர் தம் கருத்தை இன்னொருவருக்குப் புலப்படுத்த இடையே பிறிதொருவரை அனுப்புவதாகும். அரசர்கள் பகைவர்களிடத்தும், புலவர்கள் வள்ளல்களிடத்தும், தலைவர் தலைவியரிடத்தும், தலைவியர் தலைவரிடத்தும் தூது அனுப்பியுள்ளனர். இதற்கான சான்றுகள் தொல்காப்பியத்தின் மூலமும், சங்க இலக்கியத்தின் மூலமும் அறியலாம்.

தமிழரிடத்திற் தூதுவிடும் மரபு தனிப் பாடல்களிலும், பத்தி இலக்கியங்களிலும், காப்பியங்களிலும் இடம்பெற்று கி.பி. 14ஆம் நூற்றாண்டளவில் தனியொரு சிற்றிலக்கியமாக உருப்பெற்றது. இந்தவகையில் எழுந்த முதற் சிற்றிலக்கியமாக கி.பி. 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியாரின் நெஞ்சுவிடு தூதினைக் குறிப்பிடுவர். தூது இலக்கியப் பாடல்கள் கண்ணி என்ற வடிவில் அமைந்திருக்கும். இரண்டிரண்டு பூக்களைக் கொண்டு தொடுக்கப்படும் மாலைக்குக் 'கண்ணி' என்று பெயர்.அது போல இரண்டிரண்டு அடிகளைக் கொண்டு பாடப்படுவதும் 'கண்ணிகண்ணி (செய்யுள் உறுப்பு)'எனப்பட்டது.

     தூது இலக்கியத்தில் மிகச் சிறப்பான தூதாக இன்றளவும் சிறப்பிக்கபடுவது,'தமிழ் விடு தூது'தமிழ்விடு தூது நூல்தான். தூது இலக்கியமானது,'சந்து இலக்கியம்'அல்லது 'வாயில் இலக்கியம்' என்றும் அழைக்கப்படுகிறது.தூது அனுப்ப ஏவப்படும் பொருள்களாகச் சிலவற்றைப் பாட்டியல் நூல்கள் கூறியுள்ளன. அவற்றுள் அன்னம்,மயில்,கிளி,மேகம்,வண்டு,நெஞ்சம்,மான்,காக்கை ஆகியவை அடங்கும். தற்காலத்தில் புகையிலை விடு தூது,செருப்பு விடு தூது ஆகியன கூட இயற்றப்பட்டுள்ளன.      
 
       
  

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூது&oldid=4366720" இலிருந்து மீள்விக்கப்பட்டது