உள்ளடக்கத்துக்குச் செல்

மாளவிகாக்கினிமித்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாளவிகாக்கினிமித்திரம் (Mālavikāgnimitram), மாளவிகா மற்றும் அக்கினிமித்திரன் என்பதின் சமசுகிருத மொழியின் கூட்டுச் சொல்லான மாளவிகாக்கினிமித்திரம் எனும் சமசுகிருத கவிதை நாடகத்தை இயற்றியவர் மகாகவி காளிதாசன் ஆவார். இது காளிதாசனின் முதல் நாடகப் படைப்பாகும். கவிதை வடிவிலான இந்நாடகம், விதிஷாவை தலைநகராகக் கொண்ட சுங்கப் பேரரசன் அக்கினிமித்திரன் மாளவிகா எனும் பெண்னின் மீது கொண்ட காதலை விளக்குகிறது. [1]

நாடகக் கதைச் சுருக்கம்

[தொகு]

சுங்கப் பேரரசரின் பட்டத்து ராணியின் பணிப்பெண் மாளவிகா மீது சுங்கப் பேரரசர் அக்கினிமித்திரன் காதல் கொண்டதை அறிந்த பேரரசி, மாளவிகாவை நாட்டை விட்டு கடத்துகிறார். பின்னர் மாளவிகா ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதை அறிந்த பேரரசி, மாளவிகாவை தனது கணவரான அக்கினிமித்திரனுக்கு மணமுடித்து வைக்கிறார்.

மேலும் இந்நாடகத்தில் புஷ்யமித்திர சுங்கன் செய்த இராசசூய வேள்வியையும், சுங்கப் பேரரசின் காலத்திய இசை மற்றும் நடிப்புக்கலையையும் விளக்குகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  • Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kalidas, Encyclopedia Americana


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாளவிகாக்கினிமித்திரம்&oldid=4091411" இலிருந்து மீள்விக்கப்பட்டது