கலிங்க நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிங்கம்
କଳିଙ୍ଗ
கி மு மூன்றாம் நூற்றாண்டு–கி மு மூன்றாம் நூற்றாண்டு
கலிங்கா நாட்டின் எல்லைகள்
கலிங்க நாடு புகழ் பெற்றிருக்கும் போது அதன் எல்லைகள்
பேசப்படும் மொழிகள்சமசுகிருதம்
வரலாறு 
• Established
கி மு மூன்றாம் நூற்றாண்டு
• Disestablished
கி மு மூன்றாம் நூற்றாண்டு
தற்போதைய பகுதிகள் இந்தியா

கலிங்க நாடு அல்லது கலிங்கம் (About this soundஒலிப்பு ) என்பது தற்கால ஒரிஸ்சா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த பண்டைக்கால இந்திய அரசுகளில் ஒன்றாகும். மகாமேகவாகனப் பேரரசு கிமு 250 முதல் கிபி 400 முடிய கலிங்கத்தை மையமாகக் கொண்டு ஆண்டனர். இவ்வம்ச பேரரசர்களில் காரவேலன் ஆவார். சந்திர வம்ச மன்னர் யயாதியின் மகன்களின் ஒருவராகிய அணு வம்சாவளிகள் பலி என்பவனின் மகன்கள் அங்கன், வங்கன்,கலிங்கன்,சஹ்மன்,புண்ட்ரன் மற்றும் ஆந்திரன் இவர்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவார்கள். அவர்கள் , தீர்க்கதமஸ் என்ற முனிவரின் அருளால் பிறந்தவர்கள். பாரத தேசத்தின் கீழ்திசையில் ஆறு தேசங்கள் உருவாக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் " கலிங்க தேசம்".

வடக்குத் தெற்காக சுபர்ணரேகா நதியிலிருந்து கோதாவரி வரையிலும், கிழக்கு மேற்காக வங்காள விரிகுடாவிலிருந்து அமர்கந்தாக் மலைத் தொடர் வரையும் பரந்திருந்த இந்த நாடு மிகவும் வளம் பொருந்தியதாகும். வலிமை மிக்க கடற்படை கொண்ட பேரரசாக விளங்கிய இந்தப் பேரரசின் கப்பல்கள் இலங்கை, பர்மா, தாய்லாந்து, வியட்நாம், போர்னியோ, பாலி, சுமாத்திரா மற்றும் ஜாவா ஆகிய நாடுகள் வரை பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தன.

தொலை தூர இடங்களாகிய இலங்கை, பர்மா போன்ற நாடுகளிலும், இந்தோனீசியத் தீவுகளிலும் கலிங்கத்தவர் குடியேறியிருந்தனர்.

கலிங்க நாட்டிற்கு தந்தபுரம் மற்றும் இராஜபுரம் என இரண்டு தலைநகரங்கள் இருந்ததை மகாபாரதம் குறித்துள்ளது.

குரு நாட்டின் இளவரசன் துரியோதனனின் மனைவி பானுமதி, கலிங்க நாட்டின் மன்னர் சித்திராங்கதனின் மகளாவார். குருச்சேத்திரப் போரில் கலிங்க நாட்டுப் படைகள், கௌரவர் அணியின் சார்பாக போரிட்டனர்.

அங்க நாடு (கிழக்கு பிகார்), வங்க நாடு (தெற்கு வங்காளம்), பௌண்டர நாடு (மேற்கு வங்காளம்) மற்றும் சுக்மா நாடு மற்றும் (வடமேற்கு வங்காளதேசம்) ஆகிய நாட்டு மன்னர்களுக்கு, கலிங்க நாட்டு அரச மரபினர்களே பொதுவான முன்னோர்கள் ஆவார்.

மகாபாரத குறிப்புகள்[தொகு]

Map
வரலாற்று ஆவணங்களின் குறிப்புப்படி கலிங்கப் பிரதேசத்தின் பரப்புகள்

பரத கண்டத்தின் பண்டைய நாடுகளில் ஒன்றான கலிங்க நாட்டையும் மகாபாரதம் குறித்துள்ளது. கலிங்கத்திற்கு கிழக்கில் கிராதர்கள் நாடும் இருந்ததாகவும் மகாபாரதம் குறித்துள்ளது.

குருச்சேத்திரப் போரில்[தொகு]

குருச்சேத்திரப் போரில் கலிங்க நாட்டு மன்னன் சுருதயுதன், பட்டத்து இளவரசன் சக்கரதேவன் மற்றும் கலிங்கப் படைகளும் கௌரவர் அணி சார்பாக போரிட்டனர். போரில் வீமனால் கலிங்கர்கள் கொல்லப்பட்டனர்.

கலிங்கப் போர்[தொகு]

மௌரியப் பேரரசின்  அசோகருக்கும் கலிங்க நாட்டுக்கும் இடையில் நடந்த போரில், அசோகர் வெற்றி பெற்ற பின்னர் பௌத்த சமயத்தைத் தழுவி அகிம்சை வழியில் நாட்டை ஆண்டார்.[1]

கலிங்க நாட்டில் சிவ வழிபாடு[தொகு]

கலிங்க நாட்டவரகள் புலி வடிவத்தில் சிவனை வியாக்கிரேஸ்வரர் என்ற பெயரில் வழிபட்டதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (13,17)

பிற குறிப்புகள்[தொகு]

  • கலிங்க நாட்டு இளவரசி கரம்பாவை குரு நாட்டின் மன்னர் புரு மணந்தார். இவ்விணையரின் மகன் தேவதீதி ஆவார். (மகாபாரதம் 1: 95)
  • தேவர்களின் படைத்தலைவரான காத்திகேயனின் கூட்டாளிகளில் கலிங்க நாட்டவர்களும் அடங்குவர். (9: 45)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Detail History of Odisha". 2013-04-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-02 அன்று பார்க்கப்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிங்க_நாடு&oldid=3548433" இருந்து மீள்விக்கப்பட்டது