தந்தவக்ரன்
Jump to navigation
Jump to search
தந்தவக்ரன் (Dantavakra) (சமசுகிருதம்:दन्तवक्र), மகாபாரதம் மற்றும் புராணங்களின்படி கருஷ நாட்டின் மன்னன் ஆவான். பத்ம புராணத்தின்படி, தந்தவக்ரன் சேதி நாட்டு மன்னன் ஆவான்.[1]விஷ்ணு புராணத்தின்படி, தந்தவக்ரன், விருத்தசர்மன் – சுருத்தேவி இணையரின் மகனாவார்.[2] தந்தவக்ரன், ஜராசந்தனின் கூட்டாளியும், சிசுபாலனின் உறவினரும் ஆவான். மேலும் ஸ்ரீகிருஷ்ணனுக்கு பகைவன் ஆவான். தருமனின், இந்திரப்பிரஸ்த ராஜசூய யாகத்தில் கலந்து கொள்ள பலராமனுடன் கிருஷ்ணர் சென்ற நேரத்தில், தந்தவக்ரன், துவாரகையை முற்றுகையிட்டு தாக்கினான். மீண்டும் துவாரகையை தந்தவக்ரன் தாக்கிய போது கிருஷ்ணனின் சக்கராயுதத்தால் மாண்டான்.
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
--