கோவர்தன மலை

ஆள்கூறுகள்: 27°30′37.93″N 77°28′33.98″E / 27.5105361°N 77.4761056°E / 27.5105361; 77.4761056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணர் கோவர்தன மலையை தூக்கும் காட்சி
கோவர்தனருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்
கோவர்தன மலை, மதுரா மாவட்டம்
பூக்கள் ஏரி, கோவர்தன மலை
பூக்கள் ஏரி, 2017

கோவர்தன மலை (Govardhan Hill) (சமக்கிருதம்: गोवर्धन पर्वत) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம், மதுரா மாவட்டத்தில் அமைந்த 8 கிலோ மீட்டர் நீளமும், 100 அடி உயரமும் கொண்ட மலை ஆகும். இளவயதில் கிருஷ்ணர், இந்திரனின் கோபத்தால் பொழியப்பட்ட பெருமழையிலிருந்து யாதவ மக்களையும், ஆவினங்களையும் காக்க, இம்மலை குன்றை குடை போன்று தூக்கிப் பிடித்ததால், கிருஷ்ணருக்கு கோவர்தனன் எனப்பெயராயிற்று.[1][2]கோவர்தன மலை மதுரா நகரத்திலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவிலும், பிருந்தாவனத்திலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[3] கோவர்தன மலையில் கிருஷ்ணரின் கோயில் உள்ளது.[4][5]கிருஷ்ண பக்தர்கள் இம்மலையை வலம் வருவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dev Prasad (27 January 2015). Krishna: A Journey through the Lands & Legends of Krishna. Jaico Publishing House. பக். PT 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8495-170-7. https://books.google.com/books?id=o0_5caqiUH0C&pg=PT147. 
  2. Henry George Keene (1878). A Handbook for Visitors to Agra and Its Neighbourhood. Thacker, Spink. பக். 71–72. https://archive.org/details/ahandbookforvis05keengoog. 
  3. "Vrindavan to Radha Kund". Google mpas. பார்க்கப்பட்ட நாள் 7 April 2017.
  4. David L. Haberman, River of Love in an Age of Pollution: The Yamuna River of Northern India, Page 264 ISBN 0-520-24789-2
  5. Kapila D. Silva; Neel Kamal Chapagain (2013). Asian Heritage Management: Contexts, Concerns, and Prospects. Routledge. பக். 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-52054-6. https://books.google.com/books?id=3ofDt_8kyYcC&pg=PA179. 

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவர்தன_மலை&oldid=3437013" இலிருந்து மீள்விக்கப்பட்டது