உள்ளடக்கத்துக்குச் செல்

இராதா கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராதா கிருஷ்ணன்
கோபியர்கள் புடைசூழ இராதை (வலது) - கிருஷ்ணர் (இடது)
தேவநாகரிराधा कृष्ण
சமசுகிருதம்rādhā-kṛṣṇa
வகைகிருஷ்ணன் திருமாலின் எட்டாவது அவதாரம்
இடம்பிருந்தாவனம்
துணைராதை

இராதா கிருஷ்ணன் (Radha Krishna) (IAST rādhā-kṛṣṇa, சமஸ்கிருதம் राधा कृष्ण), இந்து சமயத்தில், குறிப்பாக வைணவ சமயப் பிரிவில் ஆண்பால் மற்றும் பெண்பால் இணைந்த தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. வைணவ மரபில் சுயம்பகவானாக விளங்கும் கிருஷ்ணரை பரமாத்மாவாகவும், ராதையை ஜீவாத்மாகவும் கருதப்படுகிறது. கிருஷ்ணருடன், இராதை தெய்வமாக கருதப்படுகிறார்.[1][2]

பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண பக்தரான ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்தம் என்ற நூலில், கிருஷ்ண பக்தையான இராதைக்கும், கிருஷ்ணருக்கும் இடையே மலர்ந்த தெய்வீகக் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.[3] பிருந்தாவனத்தில் அனைத்து கோபியர்கள் புடைசூழ இராதையுடன், இரவு நேரங்களில் கிருஷணர் ராசலீலை விளையாட்டு ஆடுவது வழக்கம்.[4]

வட இந்தியக் கோயில்களில், குறிப்பாக அகில உலக கிருஷ்ண பக்தி இயக்க கோயில்களில் இராதா - கிருஷ்ணரை மூலவராக வைத்து வழிபடும் மரபு உள்ளது.

குழல் ஊதும் கண்ணனுடன், ஊஞ்சலில் இராதை, வெண்கலச் சிற்பம்

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் வாசிக்க

[தொகு]
  • Kakar, Sudhir. "Erotic fantasy: the secret passion of Radha and Krishna",Contributions to Indian Sociology (New Series) 19, no.1 (Jan-June 1985):75-94.
  • Miller, Barbara Stoller. "The divine duality of Radha and Krishna", in The Divine Consort: Radha and the Goddesses of India, eds. J. S. Hawley and D. M. Wulff. Berkeley: University of California Press, 1982, pp. 13–26.
  • Patnaik, Debi Prasanna (1955). "Concept of Radhakrishna in the Panchasakha Literature". Proceedings of Indian Oriental Conference 18: 406–411. 
  • Goswami, Sri Rupa. Bhakti-Rasamrta-Sindhuh. Vrindaban: Institute of Oriental Philosophy, 1965.
  • Prabhupada, A. C. Bhaktivedanta Swami. Krsna: The Supreme Personality of Godhead. [A Summary Study of Srila Vyasadeva’s Srimad-Bhagavatam, Tenth Canto.] Los Angeles: Bhaktivedanta Trust, 1970. 2 vols.
  • Wilson, Frances, ed. The Love of Krishna: The Krsnakarnamarta of Lilasuka Bilvamangala. Philadelphia: University of Pennsylvania Press, 1975
  • Vaudeville, Ch (1962). "Evolution of Love-Symbolism in Bhagavatism". Journal of the American Oriental Society 82 (1): 31–40. doi:10.2307/595976. 
  • Wulff, D. M. The Divine Consort: Radha and the Goddesses of India, Berkeley: University of California Press. 1982
  • Refer Wiki Article Radha Krishna Spiritual Portal
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதா_கிருஷ்ணன்&oldid=4057515" இலிருந்து மீள்விக்கப்பட்டது