இலக்குமணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணனுடன் எண்மனையாட்டி - 19ஆம் நூற்றாண்டு மைசூர் ஓவியம்.

இலக்குமணை என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். எண்மரில் இவள் எட்டாவது ஆவாள். இவள் வரலாறு, மகாபாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், அரிவம்சம், முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.[1]

தொன்மங்கள்[தொகு]

வீணை வாசிப்பதில் வல்லவரான[2] பிருகத்சேனரின் மகளாக இலக்குமனை சொல்லப்படுகின்றாள். மத்ரதேச இளவரசியாக, "மாத்திரி" என்ற பெயரில், இவள் பொதுவாகச் சுட்டப்படுகின்றாள்.[3][4]

விஷ்ணு புராணம்: இலக்குமணையை "சாருகாசினி" என்றழைப்பதுடன், அவளை எண்மனையாட்டியரில் ஒருத்தியாகக் குறிப்பிடும் போதும், "மாத்திரி" என்ற பெயரில், இன்னொருத்தியையும் சொல்கின்றது.[4]

பாகவத புராணம்: மத்திர நாட்டின் பெயர் தெரியா மன்னன் ஒருவனின் மகளாகவும், நற்குணங்கள் வாய்ந்தவளாகவும் இலக்குமணையை இனங்காட்டுகின்றது.[5]

பத்ம புராணம்: மத்திரநாட்டு மன்னனை, "பிருகத்சேனன்"' என்று அடையாளம் காட்டுகின்றது.[6]


அரி வம்சம்: இதுவும் அவளை "சாருகாசினி என்கின்றது. எனினும் விஷ்ணு புராணம் போலவே, மத்திரநாட்டுடன் இணைக்கவில்லை. "சுபீமை" எனும் பெயருடன் வேறொருத்தியை "மாத்திரி" என்ற பெயரில் எண்மனையாட்டியரில் ஒருத்தியாகக் குறிப்பிடுகின்றது.[7]

இலக்குமணைக்கு, அவள் தந்தை வைத்த மணத்தன்னேற்பில் கண்ணன் அவளைக் கவர்ந்துகொண்டதாக, பாகவத புராணம் விவரிக்கின்றது.[8][3] இன்னொரு கதையில், ஜராசந்தன், துரியோதனன் ஆகியோரே தவறவிட்ட விற்போட்டியொன்றில் வென்று, அவளைக் கண்ணன் மாலையிட்டதாகச் சொல்லப்படுகின்றது.அப்போட்டியில் அருச்சுனன் பங்குபற்றி, வேண்டுமென்றே தோற்றுப்போனதாகவும் பீமன் போட்டியில் கலந்துகொள்ளாது தவிர்த்ததாகவும் அக்கதை நீள்கின்றது.[9]


கண்னனும் அவனது எண்மனையாட்டியரும் ஒருமுறை அத்தினாபுரம் சென்றபோது,. நாணமும் கம்பீரமும் நிறைந்த இலக்குமணை, தன்னைக் கண்ணன் மணந்த வரலாற்றை திரௌபதியிடம் விவரிக்கின்றாள்.[2]

பிற்கால வாழ்க்கை[தொகு]

பாகவத புராணத்தின் படி, பிரகோசன், கத்திரவான், சிங்கன், பலன், பிரபலன், ஊர்த்துவகன், மகாசக்தி. சகன், ஓயன், அபராயிதன் என்று அவளுக்கு பத்துக் குழந்தைகள்.[10]விஷ்ணு புராணம், அவளுக்கு கத்திரவான் முதலான பல மைந்தர் இருந்ததைச் சுட்டிக் காட்டுகின்றது.[4] கண்ணனின் மறைவுக்குப் பின், அவனது ஏனைய தேவியர் போலவே இவளும் உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.[11] [12]

மேலும் பார்க்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. Vettam Mani (1975). Puranic Encyclopaedia: a Comprehensive Dictionary with Special Reference to the Epic and Puranic Literature. Motilal Banarsidass Publishers. பக். 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8426-0822-0. https://archive.org/details/puranicencyclopa00maniuoft. 
 2. 2.0 2.1 Rakosh Das Begamudre; Pōtana (1988). Amrutha of Sreemad Bhagavatha: adapted and translated from the Telugu original of Kavi Bammera Pothana. Rakosh Das Beegamudre. http://books.google.com/books?id=e_IcAAAAMAAJ. பார்த்த நாள்: 7 February 2013. 
 3. 3.0 3.1 Prabhupada. "Bhagavata Purana 10.61.15". Bhaktivedanta Book Trust. http://vedabase.net/sb/10/61/15/en. 
 4. 4.0 4.1 4.2 Horace Hayman Wilson (1870). The Vishńu Puráńa: a system of Hindu mythology and tradition. Trübner. பக். 81–3, 107-8. http://books.google.com/books?id=RO8oAAAAYAAJ&pg=PA82. பார்த்த நாள்: 21 February 2013. 
 5. Prabhupada. "Bhagavata Purana 10.58.57". Bhaktivedanta Book Trust இம் மூலத்தில் இருந்து 2011-09-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110920104704/http://vedabase.net/sb/10/58/57/en. 
 6. Vettam Mani (1975). Puranic Encyclopaedia: a Comprehensive Dictionary with Special Reference to the Epic and Puranic Literature. Motilal Banarsidass Publishers. பக். 448. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8426-0822-0. https://archive.org/details/puranicencyclopa00maniuoft. 
 7. "Harivamsha Maha Puraaam - Vishnu Parvaharivamsha in the Mahabharata - Vishnuparva Chapter 103 - narration of the Vrishni race". Mahabharata Resources Organization. http://mahabharata-resources.org/harivamsa/vishnuparva/hv_2_103.html. பார்த்த நாள்: 25 January 2013. 
 8. "Five Ques married by Krishna". Krishnabook.com. http://krsnabook.com/ch58.html. பார்த்த நாள்: 25 January 2013. 
 9. Aparna Chatterjee (December 10, 2007). "The Ashta-Bharyas". American Chronicle இம் மூலத்தில் இருந்து 6 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121206024252/http://www.americanchronicle.com/articles/view/45238. பார்த்த நாள்: 21 April 2010. 
 10. "The Genealogical Table of the Family of Krishna". Krsnabook.com. http://krsnabook.com/ch61.html. பார்த்த நாள்: 5 February 2013. 
 11. Prabhupada. "Bhagavata Purana 11.31.20". Bhaktivedanta Book Trust இம் மூலத்தில் இருந்து 2010-06-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100613194505/http://vedabase.net/sb/11/31/20/en. 
 12. Kisari Mohan Ganguli. "Mahabharata". Sacred-texts.com. http://www.sacred-texts.com/hin/m16/m16007.htm. பார்த்த நாள்: 18 March 2013. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்குமணை&oldid=3801533" இருந்து மீள்விக்கப்பட்டது