துரியோதனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

துரியோதனன் மகாபாரதம் கதையின் முக்கியமான பாத்திரமாவான். இவன் கௌரவர்களில் மூத்த சகோதரனாவான். இவனுக்கு கடைசிவரை கர்ணன் உற்ற தோழனாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவன் அரசனான திருதராஷ்டிரனதும், காந்தாரியினதும் மூத்த மகன்.

பிறப்பு[தொகு]

, முதல் பானை திறக்கப்பட்டது, அதிலிருந்து துரியோதனன் உதித்தான்.[1]

முதலில் துரியோதனனுக்கு சுயோதனன் என்ற பெயர்தான் வைக்கப்பட்டது. "பெரும்போர் வீரன்" என்பது அந்தப் பெயரின் பொருள். அந்தப் பெயரைப் பிறகு அவனே துரியோதனன் என்று மாற்றிக் கொண்டான். அதன் பொருள் "வெற்றிகொள்ளப்பட முடியாதவன்" அல்லது "போரில் கடுமையானவன்" ஆகும். அவன் பாம்பை தனது கொடிமரத்தின் கொடியாகப் பயன்படுத்தினான்.

வளர்ச்சி[தொகு]

துரியோதனனது உடல் மின்னலாலானது என்று சொல்லப்படுகிறது. அவன்தான் பலவான். தனது சகோதரர்களால், குறிப்பாக துச்சாதனனால் பெரிதும் மதிக்கப்பட்டான். அவன் தனது குருக்கள் கிருபர், மற்றும் துரோணரிடம் போர்ப்பயிற்சி பெற்றான். கதாயுத்தத்தில் நிபுணத்துவம் பெற பலராமரிடம் சீடனாக இருந்து நற்பெயர் பெற்று, அவனுக்குப் பிரியமான சீடனாக இருந்தான். கதாயுதத்துடன் கூடிய துரியோதனன் பீமனுக்கு நிகராக இருந்தான். கர்ணன், துரியோதனனின் உற்ற நண்பன்.

குடும்பம்[தொகு]

துரியோதனன் பிராக்ஜோதிஷ மன்னன் பகதத்தனின் புதல்வியான பானுமதியை மணந்து கொண்டான். அவனுக்கு லட்சுமணகுமாரன் என்ற மகனும், லட்சுமணா என்ற மகளும் இருந்தனர். அவர்கள் இருவரும் இரட்டையராவர். மகன் சாம்பனால் கடத்தப்பட்டு, பின்பு அவனையே திருமணம் செய்து கொள்கிறாள்.

பாத்திரம்[தொகு]

மகாபாரத இதிகாசத்தில் துரியோதனன் குருசேத்திரப் போரில் 18 அக்ரோணி படைகள் கொல்லப்பட்டது வெற்றிகொள்ளப்பட பெரும்போர் வீரன் சுயோதனன் என்ற பெயர்தான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.sacred-texts.com/hin/m01/m01116.htm

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துரியோதனன்&oldid=2137287" இருந்து மீள்விக்கப்பட்டது