பன்னிரண்டாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னிரண்டாம் நாளன்று அருச்சுனனை வீழ்த்த செய்த கௌரவர் படைகளின் செயல்களைக் காணலாம்.

அருச்சுனனின் மீது கோபம்[தொகு]

தருமரை பிடிக்க தாம் போடும் திட்டங்கள் யாவும் அருச்சுனன் இருப்பின் கைகூடாது என கௌரவர் படைகள் அறிந்தன. எனவே அருச்சுனனை எப்படியாவது தன் வழியிலிருந்து நீக்க வேண்டும் என விரும்பினர்.

சுசர்மனின் சபதம்[தொகு]

இந்நிலையில் திகர்த்த தேசத்தை சார்ந்த சுசர்மன் என்பவனும், அவனது 3 சகோதரர்களும், 35 மகன்களும் அருச்சுனனை அழிப்போம், அல்லது போரிட்டு அழிவோம் என்று சூளுரைத்து அருச்சுனனை தாக்கினர்.

சகோதரர்களின் இறப்பு[தொகு]

வீரத்துடன் போரிட்ட அருச்சுனின் தாக்குதலை தாங்க இயலாமல் சகோதரர்கள் இறந்தனர்.

துரோணரின் திட்டம்[தொகு]

துரோணர் தொடர்ந்து தருமனை சிறை பிடிக்க முயன்றும் இயலாமல் போனதோடு மட்டுமின்றி, பாண்டவர் படைகள் மிகத் தீவிரமாக போரிட்டு கௌரவர் படைகளில் பலத்த சேதத்தினை செய்தனர்.