உதங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உத்தங்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
உதங்கர், பௌசிய இராணியிடம், காது கம்மல்களை தானமாக பெறுதல் (இடது). உதங்கர் கம்மல்களை குருவின் மனைவியிடம் குரு தட்சனையாக வழங்குதல் (வலது)

உதங்கர் (Utanka), குரு வேதாவின் குருகுலத்தில் கல்வி முடித்த உதங்கர் குரு காணிக்கை செலுத்த விரும்பினார். அதற்கு குரு வேதா, தனது மனைவி கேட்கும் காணிக்கையை செலுத்துவாய் என்றார். குருவின் மனைவி, பக்கத்து நாட்டு அரசன் பௌசியனின் பட்டத்தரசி அணிந்திருக்கும் ஒரு ஜோடி தங்கக் கம்மலை நான்கு நாட்களுக்குள் பெற்று எனக்கு காணிக்கையாக செலுத்துவாய் என்றார். தன்னுடன் குருகுலத்தில் ஒன்றாக படித்த மன்னன் பௌசியனின் அரண்மனையை அடைந்து, "உனது இராணியின் ஒரு ஜோடிக் கம்மல்களை, எனது குருவின் மனைவிக்குப் குருதட்சனையாக கொடுப்பதற்கு, அதைப் பிச்சையாகக் கேட்டு வந்தேன்" என்றான்.

மன்னன் பௌசியனும், எனது பட்டத்தரசியிடம் சென்று அவள் அணிந்திருக்கும் ஒரு ஜோடி காது கம்மலை கேட்டுப் பெற்றுச் செல் என்றார். அரசன் பௌசியனின் ராணியும் விருப்பத்துடன் உத்தங்கருக்கு, தனது கம்மல்களைக் கழற்றிக் கொடுத்து விட்டு, இந்த கம்மல்களைப் பாம்புகளின் அரசனான தட்சகன் விரும்புகிறான். அதனால் இந்தக் கம்மல்களைப் பத்திரமாக எடுத்துச் செல்ல வேண்டும்" என்றாள்.

உத்தங்கர், ராணியிடம் பெற்ற கம்மல்களை குளக்கரையில் வைத்து விட்டு, குளித்துவிட்டு திரும்புகையில், தட்சகன் அக்கம்மலைகளை திருடி நாக லோகத்திற்கு எடுத்துச் சென்று விட்டான். உதங்கரும் தட்சகனை பின் தொடர்ந்து நாக லோகத்திற்கு சென்று தட்சகனிடமிருந்து போராடி கம்மல்களை மீட்டு தன் குரு பத்தினியிடம் சமர்ப்பித்தான்.

தன்னை அலைக்கழித்த தட்சகனை பழி தீர்க்க பிற்காலத்தில், தன்னுடன் குரு குலத்தில் ஒன்றாக படித்த ஜனமேஜயன் நாகங்களை கொல்வதற்கு செய்த நாக வேள்வியில் பங்கேற்றார் உத்தங்கர். [1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதங்கர்&oldid=2577445" இருந்து மீள்விக்கப்பட்டது