கங்கை, இந்து மதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்து மதத்தில் கங்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வானிலிருந்து இறங்கி வரும் கங்கை - மாமல்லபுரச் சிற்பம்

இந்து மதத்தில், கங்கை ஆறு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஆறு இந்துக்களால் கடவுளாகப் போற்றப்படுகிறது. கங்கையில் குளித்தால் செய்த பாவங்கள் எல்லாம் விலகிவிடும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வரும் இந்துக்கள், இறந்துபோன தங்கள் உறவினர்களின் சாம்பலை கங்கையில் கரைக்கின்றனர். இதனால் இறந்தவர் சொர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கையாகும். ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், காசி போன்ற முக்கியமான இந்துத் தலங்கள் கங்கையாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன.

இந்து சமய நூல்களின்படி, கங்கைக்கு எண்ணற்ற குணநலன்களும், பல கதைகளும் வழங்கப்படுகின்றன. இவை ஒன்றுக்கொன்று முரனானவை. கங்கையை சிவபெருமானின் மனைவி, முருகனின் வளர்ப்பு தாயென சைவ சமயம் கூறுகிறது.இதிகாசமான மகாபாரதம் கங்கையை பீஷ்மரின் தாயென கூறப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில் கங்கை[தொகு]

கங்கை கோயில், அரித்வார்

இந்து சமயத்தின் இதிகாசமான மகாபாரதத்தினுள் கங்கை, வருணனின் மனைவியாகவும், பீஷ்மரின் அன்னையாகவும் சித்தரிக்கப்படுகிறார். தேவலோக நதியான கங்கையும் தேவர்களும் சத்திய லோகத்தில் பிரம்மனை தரிசிக்க சென்றனர். அப்பொழுது வருண தேவன் தன்னுடைய சக்தியினால் மெல்லிய காற்றினை வீசச் செய்தான், அக்காற்றில் கங்கையின் மேலாடை விலகியது. அதைக் கண்டு திகைத்த தேவர்கள் அதைக் காணாமல் கீழ் நோக்கினர். வருணன் இச்செயலினைக் கண்டு பிரம்மா கோபமடைந்தார். அதனால் வருணனை பூலோகத்தில் மனிதனாக பிறக்கும் படி சாபமிட்டார். அத்துடன் மேலாடைய சரி செய்யாத கங்கையையும் பூலோகத்தில் பெண்ணாக பிறக்கவும், மனிதனாக பிறக்கும் வருணனை திருமணம் செய்து கணவனுக்கு பிடிக்காத செயல்களை செய்வாயெனவும் சாபமிட்டார்.

இதனால் வருந்திய கங்கை சாபவிமோசனம் கேட்டார். அதனால் மனமிறங்கிய பிரம்மா கணவனுக்கு பிடிக்காத செயல்களை செய்து வருபவளை எப்பொழுது மோகம் நீங்கிய மனிதன் அச்செயல்களுக்காக காரணம் கேட்கின்றானோ அப்பொழுது கங்கைக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார். பிரம்மாவின் சாபத்தின்படியே வருணன் சாந்தனு மகாராஜாவாக பிறந்தார். [1] கங்கை கண்ட சந்தனு அவளின் மீது காதல் கொண்டார், அவளை திருணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு கங்கை தன்னுடைய செயல்களை ஏன் என்று கேள்வி கேட்க கூடாதென ஒரு நிபந்தனையுடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள். கங்கை மீதிருந்த காதலால் அந்நிபந்தனையை சாந்தனு வடிவிலிருந்த வருணன் ஏற்றார்.

இருவருக்கும் திருமணம் நடந்து ஒரு குழந்தையும் பிறந்தது, கங்கை அக்குழந்தை எடுத்து சென்று ஆற்றில் மூழ்க செய்தாள். சந்தனு கங்கையுடைய நிபர்ந்தனையின் காரணமாக எதையும் கேட்காமல் இருந்தார். ஆனால் அடுத்தடுத்து பிறந்த அத்தனை குழந்தைகளும் கங்கை ஆற்றில் மூழ்கடித்தாள். ஏழாவது குழந்தை பிறந்தது அக்குழந்தையையும் ஆற்றில் மூழ்கடிக்க சென்ற பொழுது, அக்கொடுமை தாங்காமல் சந்தனு ஏன் அவ்வாறு செய்கிறார் என்று கேட்டார். கங்கையின் சாபம் விலகியது. அவள் பிரம்மதேவனின் சாபத்தினையும், அதன்பிறகு நிகழ்ந்தவைகளையும் விளக்கினார்.

சைவ சமயம்[தொகு]

கங்கையினை சடாமுடியில் தாங்கும் சிவபெருமான்

சைவ சமயத்தில் கங்கை சிவபெருமானின் மனைவியாகவும், சிவபெருமானின் அடையாளங்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறார். அத்துடன் சிவருத்திர புராணம் எனும் நூல் வீரபத்திரனை சிவகங்கை மகனாக சித்தரிக்கிறது.

சூரிய குலத்தின் தோன்றலாகிய திலீபன் என்பவனின் மகன் பகீரதன். தன் மூதாதையர்கள் சாபத்தால் இறந்த செய்தியை வசிட்டர் வாயிலாகக் கேள்விப்பட்டு, அவர்கள் நற்கதி அடையப் பிரம்மனை நோக்கி பத்தாயிரம் (10,000) ஆண்டுகள் தவம் புரிந்தான். அவனுடைய தவத்தினால் மகிழ்ந்த பிரம்மா தேவலோக நதியான கங்கையின் தீர்த்தம் பகீரதன் முன்னோர்களின் சாம்பலில் பட்டால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார். அதற்காக கங்கையை நோக்கி தவமிருந்தான் பகீரதன். கங்கையும் அவனுடைய தவத்தில் மகிழ்ந்து பூலோகத்திற்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்தாள். ஆனால் சிவபெருமானிடம் தன்னுடைய காதலை கூறி அவர் மறுத்துவிட்டதால், இம்முறை பகீரதனை பயன்படுத்தி சிவபெருமானை அடைய எண்ணினாள்.

அதனால் பகீரதனிடம் தான் தேவலோகத்திலிருந்து பெரும் பிரவாகமாக வருவதை கட்டுப்படுத்த சிவபெருமானால் மட்டும் இயலும் என்று கூறி அவரிடம் சம்மதம் வாங்கும்படி கூறினாள். பகீரதன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய சம்மதத்தினைப் பெற்றார். கங்கையும் சிவபெருமானை பாதாள லோகத்திற்கு அடித்து சென்று அங்கு வாழ்வதென்ற தீர்மானத்துடன் மிகவேகமாக பூலோகத்திற்கு வந்தாள். அவளுடைய ஆவேசத்தின் காரணமுணர்ந்த சிவபெருமான் தன்னுடைய சடாமுடியில் கங்கையை சிறைபிடித்தார்.

சிவபெருமானின் சடாமுடியிலேயே சுற்றி திரிந்த கங்கை மீண்டும் பூலோகத்திற்கு வர பகீரதன் தவமியற்றினான். அதனால் பூமிதாங்குமளவு மட்டும் கங்கையை சிவபெருமான் அனுமதித்தார். கங்கை பகீரதனின் முன்னோர் சாம்பலிருந்து அவர்களுக்கு மோட்சத்தினை அளித்தாள். பகீரதனின் தவத்தில் மகிழ்ந்த கங்கையை பாகீரதி என்றும், கங்கை சடாமுடியில் தாங்கியமையால் சிவபெருமான் கங்காதரன் என்று அழைக்கப்படுகிறார். [2]

வைணவ சமயம்[தொகு]

வைணவ சமயத்தில் திருமால் வாமன அவதாரம் எடுத்த பொழுது, வானை அளப்பதற்காக காலை மேலே தூக்கிய பொழுது சத்திய லோகம் வரை அக்கால் நீண்டது. அதைக் கண்ட பிரம்மா ஆகாய கங்கையால் அபிசேகம் செய்தார். அதனால் கங்கை திருமாலின் திருவடியில் பிறந்தது என்பது வைணவர்களின் நம்பிக்கையாகும். [3]

கௌமாரம்[தொகு]

முருகபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடும் கௌமார சமயமானது, முருகனை கங்கையின் மகனாக கூறுகிறது. [4] சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிபட்ட ஆறு நெருப்பு பொறிகளை கங்கையே சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தார் என்பதால் முருகனை கங்கையின் மைந்தன் என்று கூறுகின்றனர்.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள் ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.thinakaran.lk/2010/05/22/_art.asp?fn=f1005221&p=1
  2. http://www.tamilvu.org/library/l3700/html/l3700001.htm கம்பராமாயணம் யுத்தகாண்டம் | பகீரதன் (1586, 3923)
  3. http://www.teachersofindia.org/ta/article/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF
  4. http://www.kaumaram.com/thiru_uni/tpun0445.html

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கை,_இந்து_மதம்&oldid=2082306" இருந்து மீள்விக்கப்பட்டது