உள்ளடக்கத்துக்குச் செல்

விகர்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய நாட்டின் புகழ் பெற்ற இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தின் கதைமாந்தர் கௌரவர்களில் ஒருவனே விகர்ணன். கண்பார்வையற்ற மன்னனான திருதராட்டிரனுக்கும், அவனது மனைவியான காந்தாரிக்கும் பிறந்த நூறு பிள்ளைகளுள் ஒருவனே இவன்.சுதேஷ்ணவதி மற்றும் இந்துமதி ஆகியோர் அவருடைய மனைவிகள். [1]

எதிர்ப்பு[தொகு]

சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் யுதிஷ்டிரனின் தோல்விக்காக வருத்தப்பட்டவன் விகர்ணன் மட்டுமே. யுதிஷ்டிரன் ஒவ்வொன்றாய் இழந்து இறுதியில் திரௌபதியையும் இழந்து நின்ற போது,துரியோதனன் கட்டளைப்படி துச்சாதனன் திரௌபதியை கூந்தலைப் பற்றி சபையில் இழுத்து வந்து துகில் உரிந்த போது கௌரவர்களில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இருவர். அவர்களில் விகர்ணன் "யுதிஷ்டிரன் முதலில் தன்னை வைத்து இழந்தார். அதன் பிறகு அவருக்கு எவர் மீதும் உரிமையில்லை. எனவே, அவர் திரௌபதியை பணயம் வைத்தது ஏற்க முடியாது" என்று தைரியத்துடன் கூறினான். [1] உடனே கர்ணன் "இளவரசே உங்கள் விசுவாசம் யாரிடம்? உங்கள் சகோதரர் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை.அவளின் கணவர் அடிமையானதும் அடிமைகளின் மனைவியும் அடிமைதான். அவளை மீண்டும் பணயம் வைக்கத் தேவையில்லை, இருந்தாலும் அனுதாபத்தால் அவளைத் தனியாக பணயம் வைக்க ஒப்புக்கொண்டோம். உமக்கு முதிர்ச்சி இல்லாததால், உமது உணர்ச்சிகள், உமது சிந்தனையைக் குழப்ப இடங்கொடுக்க வேண்டாம் என்றான்.

விகர்ணன் மரணம்[தொகு]

குருச்சேத்திரப் போரில் பதிமூன்றாம் நாளன்று அபிமன்யுவை சக்கர வியூகத்தினுள் வைத்து கௌரவப் படைத்தளபதி துரோணர், கௌரவர்கள் விதிமுறையை மீறி (ஒரு வீரனை ஒரு வீரன் தான் நேருக்கு நேர் சண்டையிட வேண்டும்) கொன்றதை போர்களத்திலேயே எதிர்த்தவன். குருச்சேத்திரப் போரின் இறுதி நாள் அன்று பீமனால் தயக்கத்தோடு கொல்லப் பட்டான்.[1]

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

சான்றாவணம்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK
"https://ta.wikipedia.org/w/index.php?title=விகர்ணன்&oldid=3723288" இலிருந்து மீள்விக்கப்பட்டது