சோமதத்தன்
Appearance
சோமதத்தன், சந்தனுவின் தம்பியான பாக்லீக நாட்டு மன்னர் பாக்லீகரின் மகன் ஆவார். குருச்சேத்திரப் போரில் சோமதத்தன், தன் தந்தை பாக்லீகர் மற்றும் மகன் பூரிசிரவசுவுடன் கௌரவர் அணியில் இணைந்து பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டார்கள். துரோண பருவத்தின் போது, சாத்தியகியுடன் போரிட்டு சோமதத்தன் மாண்டார். [1]