தௌமியர்
Jump to navigation
Jump to search
தௌமியர், பாண்டவர்களின் புரோகிதர் ஆவார். 12 ஆண்டுகள் காடுறை வாழ்வின் போது பாண்டவர்களுடன் தங்கினார். சூரிய பகவானிடமிருந்து அட்சய பாத்திரம் பெற தருமனுக்கு மந்திரங்களை உபதேசித்தவர்.
விராட பருவத்தில் ஒரு ஆண்டு தலைமறைவு வாழ்க்கையை விராடனின் அரண்மனையில் கழிக்கும் போது எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என பாண்டவர்களுக்கு அறிவுரை வழங்கி, பின் துருபதன் நாடான பாஞ்சாலத்தில் சென்று தங்கினார்.
உத்தியோகப் பருவத்தில், சூதாட்ட விதிப்படி 12 ஆண்டு வன வாழ்வும், ஒராண்டு தலைமறைவு வாழ்வும் முடித்த பாண்டவர்களுகளுக்கு உரிய நாடு கோரி, அத்தினாபுரம் சென்று திருதராஷ்டிரனை சந்திக்க தூது சென்றவர்.[1]