மத்திர நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மத்திர நாடு (Madra Kingdom) பரத கண்டத்தில் இருந்த பண்டைய பாரத நாடுகளில் ஒன்றாகும். மத்திர நாடு இந்தியாவின் மேற்கு பகுதியில் இருந்த நாடுகளில் ஒன்றாக மகாபாரத இதிகாசத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் சகலா எனப்படும் தற்கால சியால்கோட் ஆகும். மத்திர நாட்டின் மேற்கில் கேகய நாடும், கிழக்கில் திரிகர்த்த தேசமும் அமைந்துள்ளது.

மத்திர நாட்டின் ஆட்சியாளன் சல்லியனின் சகோதரி மாதுரி, குரு நாட்டின் இளவரசன் பாண்டுவின் இரண்டாம் மனைவியாவள். குருச்சேத்திரப் போரில் பதினெட்டாம் நாள் போர் அன்று, கௌரவர் படையணியின் தலைமைப் படைத்தலைவராக இருந்த சல்லியன், தருமனால் கொல்லப்பட்டார்.

புகழ் பெற்ற மத்திர நாட்டு ஆட்சியாளர்கள்[தொகு]

குருச்சேத்திரப் போரில் சல்லியன்[தொகு]

பாண்டவர்களில் இரட்டையரான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரின் தாய்மாமனாகிய சல்லியன், குருச்சேத்திரப் போரில், பாண்டவர் அணியில் சேர்ந்து போரிட ஒரு அக்குரோணி படைகளுடன், மத்திர நாட்டை விட்டு, குருச்சேத்திரம் வரும் வழி தோறும், துரியோதனன் அனுப்பிய இரகசிய ஆட்கள், சல்லியனுக்கும், அவரது படையினருக்கும், குடிக்க நீர், உண்ண உணவு, இரவில் தங்க உறைவிடம் வழங்கி நன்கு விருந்தோம்பினர். துரியோதனனின் செஞ்சோற்று கடனை அடைக்க வேண்டி, சல்லியன், துரியோதனன் அணியில் இணைந்து, பாண்டவர் அணிக்கு எதிராக போரிட நேரிட்டது.[1] குருச்சேத்திரப் போரின் 18-ஆம் நாள் போரின் போது கௌரவர் படைகளுக்கு தலைமைப் படைத்தலைவராக போரிட்டார். போரில் தருமனால் கொல்லப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. துரியோதனனின் தந்திரம்! - உத்யோக பர்வம் பகுதி 8


"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திர_நாடு&oldid=2282331" இருந்து மீள்விக்கப்பட்டது