அம்பாலிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாபாரதக் கதையில் அம்பாலிகா காசி மன்னனின் மகளும் அஸ்தினாபுரத்து மன்னன் விசித்திரவீரியனின் மனைவியும் ஆவார்.

இவரும் இவருடைய சகோதரிகளான அம்பா, அம்பிகா ஆகியோரும் தங்களுடைய சுயம்வரத்தின்போது பீஷ்மரால் வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்டனர். பீஷ்மர் இவர்களை சத்யவதியிடம் விசித்திரவீரியனின் திருமணத்திற்காக ஒப்படைத்தார்.

விசித்திரவீரியன் இறந்து விட்டதால் அரசுக்கு வாரிசு வேண்டி சத்யவதி தனது மற்றொரு மகனான வியாசரிடம் அம்பலிகாவை அனுப்பி வைத்தார். ஏற்கனவே அம்பாலிகாவின்

மகன் குருடனாகப் பிறந்துவிட்டதால் சத்யவதி அம்பிகாவிடம்  கண்களைத் திறந்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார். எனினும் அம்பிகா
பயத்தினால் உடல் வெளிறிவிட்டார். எனவே இவர்களுக்குப் பிறந்த பாண்டு மிகவும் வெளிறிய நிறத்தில் பிறந்தார். பாண்டுவின் புதல்வர்களே பாண்டவர் எனப்படுகின்றனர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாலிகா&oldid=3140756" இருந்து மீள்விக்கப்பட்டது