உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரதர்கள் (Bhāratas) இருக்கு வேதத்தின் மூன்றாம் மண்டலத்தில், விசுவாமித்திரரால் கூறப்பட்ட பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த வேத கால இன மக்கள் ஆவார்.[1]

இருக்கு வேதம், மண்டலம் 7, பகுதி 18-இல் கூறப்பட்ட பத்து மன்னர்களின் போரில் பாரதர்களின் தலைவன் சுதாசும் பங்கு கொண்டார். போரில் வெற்றி அடைந்த பாரதர்கள் குருச்சேத்திரம் பகுதிகளில் குடிபெயர்ந்தனர்.[2]

பாரதர்களின் ஆட்சியாளர்கள் பின்னாட்களில் புருவுடன் இணைந்து, குரு நாட்டை நிறுவினர்.[3]

பிந்தைய வேத கால மகாஜனபத மக்களிடையே நடந்த ஆதிக்கப் போட்டியில் பாரதர்கள் வென்றமையால், மகாபாரத இதிகாசம், குரு நாட்டின் ஆட்சியாளர்கள், தங்களை பரத வம்சத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிக்கிறது. [4]

பேரரசர் பரதனின் பெயரால் தற்கால இந்தியாவை அதிகாரப்பூர்வமாக, பாரத நாடு என்றும் அழைக்கின்றனர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Scharfe, Hartmut E. (2006), "Bharat", in Stanley Wolpert (ed.), Encyclopedia of India, vol. 1 (A-D), Thomson Gale, pp. 143–144, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-31512-2
  2. ORIGINS AND DEVELOPMENT OF THE KURU STATE by Michael Witzel, Harvard University [1] பரணிடப்பட்டது 2011-11-05 at the வந்தவழி இயந்திரம்
  3. National Council of Educational Research and Training, History Text Book, Part 1, India
  4. Julius Lipner (2010) "Hindus: Their Religious Beliefs and Practices.", p.23
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதர்கள்&oldid=4057605" இலிருந்து மீள்விக்கப்பட்டது