உள்ளடக்கத்துக்குச் செல்

பத்து மன்னர்களின் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்து மன்னர்களின் போர்
நாள் கி மு 1400[1]
இடம் பருஷ்ணி ஆறு அருகில், பஞ்சாப் பகுதி
போரில் பாரதர்களின் மன்னர் சுதாசுவிற்கு வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
குரு நாடு உருவானது
பிரிவினர்
திருத்ஷ்து - பாரதர்கள்[2] புருக்கள்
யதுக்கள்
துர்வசுக்கள்
திருயுஹ்கள்
அலினாக்கள்
அனுக்கள்
தாசர்கள்
மத்சயர்கள்
பாணிகள்
தளபதிகள், தலைவர்கள்
மன்னர் சுதாசு
வசிட்டர்
பத்து மன்னர்கள்
விசுவாமித்திரர்
பலம்
குறைந்த படைபலம் கொண்டோர் 6,666க்கும் மேல்
இழப்புகள்
குறைந்த அளவு சேதம் 6,666 (ரிக் வேதம், மண்டலம், 7)

பத்து மன்னர்களின் போர் (Battle of the Ten Kings) dāśarājñá) குறித்து ரிக் வேதத்தில் (மண்டலம் 7இல், மந்திரம் 18, 33 மற்றும் 83.4-8) கூறப்பட்டுள்ளது. இப்போர் ரிக் வேத கால ஆரிய மன்னர் சுதாசுக்கு எதிராக புருக்கள், யதுக்கள், துர்வசுக்கள், திருயுஹ்கள், அலினாக்கள், அனுக்கள், தாசர்கள், மத்சயர்கள் மற்றும் பாணிகள் போன்ற பத்து ஆரிய இன மன்னர்கள், பஞ்சாப்பின் ராவி ஆற்றாங்கரையில் ஏறத்தாழ கி மு 1400-1300களுக்கிடையே, நூறு ஆண்டுகள் போரிட்டனர். [3] போரின் முடிவில் பத்து மன்னர்களை வென்று பாரதர்களின் மன்னர் சுதாசு வெற்றி அடைந்தார். [4]

சுதாசுக்கு எதிரான போரில், போரைத் திறம்பட நடத்திட உதவியாக விசுவாமித்திரர்,பத்து மன்னர்களுக்கு இராஜ குருவாக செயல்பட்டார். பல ஆண்டுகளாக நடந்த பத்து மன்னர்களுக்கு எதிரான போரின் முடிவில் மன்னர் சுதாசு வெற்றி பெற்றார்.

போரின் முடிவுகள்[தொகு]

வசிட்டரின் ஆலோசனையால், பத்து அரசர்களுக்கு எதிரான போரில் மன்னன் சுதாசு பெற்ற வெற்றி ஏழு ஆறுகள் பாயும் பகுதிகளில் சிதறி கிடந்த ஆரிய மக்களை ஒன்று படுத்தியது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Witzel, Michael (2000). "The Languages of Harappa". In Kenoyer, J.. Proceedings of the conference on the Indus civilization.
  2. Scharfe, Hartmut E. (2006), "Bharat", in Stanley Wolpert (ed.), Encyclopedia of India, vol. 1 (A-D), Thomson Gale, pp. 143–144, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-31512-2
  3. Witzel (2000): between approximately 1450 and 1300 BCE
  4. The Rig Veda
  5. ரிக்வேதம் 7-33-107

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்து_மன்னர்களின்_போர்&oldid=2697651" இலிருந்து மீள்விக்கப்பட்டது