பர்வத நாடு
Appearance
பர்வத நாடு (Parvatas Kingdom) பர்வதம் என்ற சமஸ்கிருத மொழிச் சொல்லிற்கு மலை எனப் பொருள்படும். பண்டைய பரத கண்டத்து நாடான பர்வத நாடு, இமயமலை நாடுகளில் ஒன்றாக மகாபாரதம் கூறுகிறது.
பர்வத நாட்டு பர்வதர்கள் குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்டனர்.
மகாபாரதக் குறிப்புகள்
[தொகு]கிருஷ்ணரின் படையெடுப்புகள்
[தொகு]கிருஷ்ணர் வென்ற நாடுகளை பட்டியலிடும் போது பர்வத நாடும் ஒன்றாக உள்ளது. [1]
குருச்சேத்திரப் போரில்
[தொகு]குருச்சேத்திரப் போரில் பர்வத நாட்டுப் படைகள் கௌரவர் அணியில் இணைந்து பாண்டவர் அணிக்கு எதிராகப் போரிட்டனர். [2]
பர்வத நாட்டவர்களுடன், சமசப்தர்கள், காம்போஜர்கள், சகர்கள், மிலேச்சர்கள் மற்றும் யவனர்களை அருச்சுனன் வென்றழித்தான். [3]