மிலேச்சர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிலேச்சர்கள் (Mleccha) (சமஸ்கிருதம்: म्लेच्छ), என்ற சொல்லிற்கு பண்படாத மக்கள் என்று பொருள். வேத காலத்தில் பண்டைய பரத கண்டத்திற்கு வெளியே இருந்த நாடுகளின் மக்களை குறிக்க மிலேச்சர் என்ற சொல், பயன்படுத்தப்பட்டது.

மேலும் பரத கண்டத்தில் வாழ்ந்த வெளிநாட்டு மக்களையும், அவர்களது நாடுகளையும் குறிப்பதற்கும் மிலேச்சர் என்ற சொல் வேத கால பரத கண்ட மக்களால் பயன்படுத்தப்பட்டது. இனம், நிறம், மொழி வேறுபாடு கருதாமல், பரத கண்டத்திற்கு வெளியே இருந்து, பரத கண்டத்தில் குடியேறி வாழ்ந்த மக்களையும் குறிப்பதாகும்.[1][2] வியாசரின் மகாபாரத காவியத்தில் மிலேச்ச மக்கள், மிலேச்ச நாடுகள், மன்னர்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

வேத தர்மங்களை பின்பற்றாத பாரசீகர்களையும், கிரேக்கர்களையும், உரோமானியர்களையும், அரபியர்களையும், சீனர்களையும் குறிப்பதற்கு மிலேச்சர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.[3] மத்திய கால இந்தியாவில், வெளிநாட்டவர்களை தூய்மையற்றவர்கள் எனக் கருதி அவர்களை மிலேச்சர்கள் என குறிப்பிட்டு, சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்தனர் என இந்தியாவில் பயணித்த பாரசீக அறிஞர் அல்-பிருனி தனது பயணக் குறிப்புகளில் குறித்துள்ளார்.[4]

பெயர்[தொகு]

வாயு புராணம், மச்ச புராணம் மற்றும் பிரமாண்ட புராணங்களில், சப்த நதிகளுக்கு மேற்கே உள்ள நாடுகளை மிலேச்சர்களின் நாடுகள் எனக் குறித்துள்ளது.[5] இந்து சமய பிரமாணங்களில் மிலேச்சர்களை வருணாசிரம தருமத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என கூறுகிறது.[6]

மகாபாரதக் குறிப்புகள்[தொகு]

வியாசரின் மகாபாரத காவியத்தில் மிலேச்ச மக்கள், மிலேச்ச நாடுகள், மன்னர்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. மிலேச்ச போர் வீரர்கள், தூய்மையற்ற பழக்கவழக்கங்களையும், தலையை முழுவதுமாக அல்லது பாதி அளவிற்கு மழித்துக் கொண்டு, முகத்தை மூடும் அளவிற்கு தலைக்கவசம் அணிந்து, கோரமான முகத்தையும் மூக்கையும் உள்ளவர்கள் என மகாபாரதம் குறிப்பிடுகிறது.[7] மலைகளில், மலைக் குகைகளில் வாழ்பவர்கள். வசிட்டரின் நந்தினி எனும் தெய்வீக பசுவை கவர வந்த விசுவாமித்திரரின் போர்ப்படைகளை எதிர் கொள்ள, வசிட்டரின் ஆணைப்படி, நந்தினி தனது கோரமான கண்களிலிருந்து வெளியிட்ட பல இன போர்வீரர்களில் மிலேச்சர்களும் ஒருவகையினர் ஆவார்.[8]

மிலேச்ச அரசர்களில் புகழ்பெற்றவர்களில் பிராக்ஜோதிச நாட்டின் மன்னர் பகதத்தனும் ஒருவராவார். குருச்சேத்திரப் போரில் மிலேச்சப் படைகள் பாண்டவர் அணிக்கு எதிராகப் பெரும் யாணைப்படைகளுடன் போரிட்டனர்.[9][10] இந்தியாவின் கிழக்கில் இருந்த பாலப் பேரரசு மிலேச்சர்களின் நாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Basham, A. L. (1954) The wonder that was India, pages 145-146, Sidgwick and Jackson, London.
  2. http://www.dictionary.reference.com/browse/mleccha
  3. Vedabase பரணிடப்பட்டது 2007-11-16 at the வந்தவழி இயந்திரம்.
  4. Rizvi, S.A.A. (1987), The wonder that was India, volume II, pages 252-253, Sidgwick and Jackson, London
  5. Sharma 1978, ப. 152.
  6. Nath, Vijay (2002). "King Vena, Nisāda and Prthu: A Recurrent Purānic Myth Re-Examined". Indian Historical Review 29: 59. doi:10.1177/037698360202900203. 
  7. ."Mlecchas in early India: a study in attitudes towards outsiders up to AD 600
  8. Mahabharata, Drona Parva, Section 92.
  9. Encyclopaedic Dictionary of Puranas: (A-C) ; 2.(D-H) ; 3.(I-L) ; 4.(M-R) ; 5 ... By Swami Parmeshwaranand
  10. Parmeshwaranand, Swami (2001-01-01) (in en). Encyclopaedic Dictionary of Puranas. Sarup & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788176252263. https://books.google.com/books?id=QxPCBCk3wVIC. 
Sources

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிலேச்சர்கள்&oldid=3710616" இலிருந்து மீள்விக்கப்பட்டது