உள்ளடக்கத்துக்குச் செல்

சிவி நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாபாரத இதிகாச கால நாடுகள்

சிவி நாடு அல்லது சிபி நாடு (Sivi kingdom or Sibi kingdom) மகாபாரத காவியம் குறிப்பிடும் பண்டைய பரத கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்த நாடுகளில் ஒன்றாகும். சிபி நாட்டு மன்னர்கள் நேர்மைக்கும், வாய்மைக்கும் பெயர் பெற்றவர்கள். புராணக் கதையின் படி, பருந்தின் வேட்டைக்கு அஞ்சிய புறா, சிபிச் சக்கரவர்த்தியின் காலடியில் தஞ்சம் புகுந்ததால், பருந்திற்குத் தேவையான மாமிசத்தை தனது தொடையிலிருந்து அறுத்துக் கொடுத்தான்.

புராணத்தில் சிவி நாடு, சிந்து நாடு மற்றும் சௌவீர நாடுகளுக்கு ஜயத்திரதன் என்பவர் மாமன்னராக விளங்கினார் எனக் கூறுகிறது.

இதனையும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவி_நாடு&oldid=2282258" இலிருந்து மீள்விக்கப்பட்டது