துவாரகை
துவாரகை દ્વારકા | |
---|---|
நகரம் | |
![]() | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | தேவபூமிதுவாரகை மாவட்டம் |
ஏற்றம் | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 33,614 |
மொழிகள் | |
• Official | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
துவாரகை அல்லது துவாரகா என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அரபுக்கடற் கரையில் அமைந்த பண்டைய நகரமாகும். யது குல அரசர்கள் ஆண்ட ஆனர்த்த நாட்டின் தலைநகரான துவாரகையை, கிருட்டிணன் புதிதாக அமைத்ததாக நம்பப்படுகின்றது. முக்தி தரும் ஏழு நகரங்களில் துவாரகை நகரம் ஒன்றாக உள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருத்துவாரகை இங்கு அமைந்துள்ளது குறிக்கத்தக்கது. ஆதிசங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான துவாரகை மடம் இங்கு அமைந்துள்ளது. மேலும் துவாரகை சிந்துவெளி நாகரீக தொல்லியல் களங்களில் ஒன்றாக உள்ளது. [1] [2]
துவாரகை என்பதன் பொருள்[தொகு]
துவாரகையை துவாரவதி என்றும் அழைப்பர். துவாரகை என்பதற்கும் துவாராவதி என்பதற்கும் சமஸ்கிருத மொழியில் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள். மகாபாரதத்தில் துவாரகை, யது குலத்தின் ஒரு பிரிவான விருஷ்ணிகள் ஆண்ட ஆனர்த்த இராச்சியத்தின் தலைநகராக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாபாரதத்தில் துவாரகை[தொகு]
- துர்வாச முனிவர் நீண்டகாலம் துவாரகையில் தங்கி தவமிருந்தார். (மகாபாரதம்; 13, 160)
- பாண்டவர்கள் வன வாழ்க்கை காலத்தில் அருச்சுனன் சில ஆண்டுகள் துவாரகையில் தங்கி சுபத்திரையை மணந்தான்.
- பாண்டவர்கள் காடுறை வாழ்க்கையின் போது, பாண்டவர்களின் புதல்வர்களான அபிமன்யு, உபபாண்டவர்கள் மற்றும் பணியாட்கள், இந்திரசேனன் என்பவன் தலைமையில் துவாரகையில் தங்கினர். (4, 72)
- துவாரகைக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கு இடையே ஒரு பாலைவனம் (தார் பாலைவனம்) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. (14-53, 55)
- குருச்சேத்திரப் போரில் துவாரகையின் கிருதவர்மன், கௌரவர் அணியிலும்; சாத்தியகி பாண்டவர் அணியிலும் நின்று போரிட்டனர்.
- மௌசல பர்வத்தில், சாம்பனால் யாதவர்கள் ஒருவருகொருவர் சண்டையிட்டு மடிந்த பின் பலராமர் துவாரகையை தீயிட்டு அழித்த பின் சரசுவதி ஆற்றை நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டார். (9, 35)
துவாரகை தொல்லியல் அகழ்வாய்வுகள்[தொகு]
1963ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம், துவாரகையின் கடற்கரையிலும், கடலிலும் தொல்லியல் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொண்டதில் பழம்பெரும் நகரத்தின் தொல்பொருட்களை கண்டெடுத்து ஆய்வு செய்தது.[3] கடல் பகுதியில் இரண்டு இடத்தில் தொல்லியல் அகழ்வாய்வு செய்ததில் பண்டைய இந்தியாவின் மத்திய கால இராச்சியங்களில் ஒன்றான துவாரகை நகரமும், துறைமுகமும் மண் அரிப்பால் கடலில் மூழ்கியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. [4]வல்லபியை தலைநகராக் கொண்டு, ஆனர்த்த இராச்சியத்தை ஆண்ட மன்னர் சிம்மாதித்தியன் கிபி 574ல் வெளியிட்ட செப்புப் பட்டயத்தில் துவாரகை நகரத்தை குறித்துள்ளது. துவாரகை அருகே உள்ள பேட் துவாரகை இந்துக்களின் புனிதத் தலமாகவும், கிமு 1570 காலத்திய, பிந்தைய அரப்பா தொல்லியல் களங்களில் ஒன்றாக உள்ளது. [5]
நிலவியல்[தொகு]
சௌராஷ்டிர தீபகற்பத்தில் புதிதாக துவக்கப்பட்ட தேவபூமி துவாரகை மாவட்டத்தின், கட்ச் வளைகுடாவின் கழிமுகத்தில், கோமதி ஆற்றின் வலது கரையில் துவாரகை நகரம் அமைந்துள்ளது. [6]
போக்குவரத்து[தொகு]
துவாரகையின் சாலைகள், தொடருந்து நிலையம்[7] நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கிறது. அருகில் உள்ள விமான நிலையம், துவாரகையிலிருந்து 131 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாம்நகர் விமான நிலையம் ஆகும்.[8]
மக்கள்பரம்பல்[தொகு]
2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி துவாரகை நகரத்தின் மக்கள் தொகை 38,873 ஆகும்.[9][10]). மக்கள் தொகையில் ஆண்கள் 53%; பெண்கள் 47%. மொத்த எழுத்தறிவு 72%. அதில் பெண்கள் எழுத்தறிவு 55%. மொத்த மக்கள் தொகையில், ஆறு வயதிற்குரிய குழந்தைகள் எண்ணிக்கை 13% ஆகும்.[9]
தட்பவெப்ப நிலை[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், துவாரகை | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 33 (91) |
35 (95) |
38 (100) |
41 (106) |
42 (108) |
37 (99) |
35 (95) |
31 (88) |
39 (102) |
39 (102) |
37 (99) |
33 (91) |
42 (108) |
உயர் சராசரி °C (°F) | 25 (77) |
26 (79) |
27 (81) |
29 (84) |
31 (88) |
31 (88) |
30 (86) |
29 (84) |
29 (84) |
30 (86) |
30 (86) |
27 (81) |
28.7 (83.6) |
தாழ் சராசரி °C (°F) | 15 (59) |
17 (63) |
21 (70) |
24 (75) |
27 (81) |
27 (81) |
27 (81) |
26 (79) |
25 (77) |
24 (75) |
20 (68) |
16 (61) |
22.4 (72.4) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 5 (41) |
8 (46) |
7 (45) |
17 (63) |
20 (68) |
22 (72) |
21 (70) |
21 (70) |
22 (72) |
17 (63) |
9 (48) |
8 (46) |
5 (41) |
பொழிவு mm (inches) | 0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
50 (1.97) |
170 (6.69) |
60 (2.36) |
30 (1.18) |
0 (0) |
0 (0) |
0 (0) |
310 (12.2) |
% ஈரப்பதம் | 53 | 65 | 71 | 79 | 80 | 79 | 81 | 82 | 80 | 74 | 64 | 53 | 71.8 |
சராசரி மழை நாட்கள் | 0 | 0 | 0 | 0 | 0 | 4 | 11 | 6 | 3 | 0 | 0 | 0 | 24 |
ஆதாரம்: Weatherbase[11] |
ஆன்மீகத் தலங்கள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- முக்தி தரும் ஏழு நகரங்கள்
- இராக்கிகர்கி
- தோலாவிரா
- காளிபங்கான்
- லோத்தல்
- ரூப்நகர்
- பாபர் கொட்
- அரப்பா
- மொகஞ்சதாரோ
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Significant finds at Dwaraka
- ↑ Archaeology of Bet Dwarka Island
- ↑ Subramanian, T.S. (23 February 2007). "Significant finds at Dwaraka". The Hindu. 24 பிப்ரவரி 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Gaur, A.S.; Sundaresh and Sila Tripati (2004). "An ancient harbour at Dwarka: Study based on the recent underwater explorations". Current Science 86 (9).
- ↑ Ansari, Z. d (1964). Excavations At Dwarka: 1963. https://archive.org/details/in.ernet.dli.2015.533668.
- ↑ Gaur, A.S.; Tripati, Sila. "Ancient Dwarka: Study Based On Recent Underwater Archaeological Investigation" (pdf). National Institute of Oceanography. pp. 56–58. 11 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ துவாரகை தொடருந்து கால அட்டவணை
- ↑ "Dwarka Nagari -Introduction & Importance". Dwarkadish organization. 23 ஜூன் 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 27 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 9.0 9.1 "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. 16 ஜூன் 2004 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 1 November 2008 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Dwarka Population Census 2011". Census2011.com. 1 November 2008 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Dwarka Climate Record". 2 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- கடலில் மூழ்கிய துவாரகை, காணொலி காட்சிகள்
- கோமதி ஆறு கடலில் கலக்கும் இடம், துவாரகை
- துவாரகை நகர வரலாறு பரணிடப்பட்டது 2014-03-04 at the வந்தவழி இயந்திரம்
- துவாரகை சுற்றுலா பயணிகளுக்கான குறிப்புகள் பரணிடப்பட்டது 2014-03-04 at the வந்தவழி இயந்திரம்