கஜூரஹோ நந்திக்கோவில்
இந்தியாவிலுள்ள மத்திய பிரதேச மாநிலத்தில், கஜுராஹோ [1] என்னுமிடத்தில் முக்கிய வழிபாட்டுத்தெய்வமாக நந்தி உள்ளது. இது இந்து மத நம்பிக்கையின்படி இறைவன் சிவனாரின் வாகனமாக உள்ளதால் அதனை போற்றும்படி இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கஜூரஹோ கோவில் அமைப்புகள் இந்தியாவின் உலகபண்பாட்டுத்தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அமைவிடம்[தொகு]
கஜூராஹோவின் கிழக்கு கோவில்களின் வளாகத்தின் உட்பகுதியில் விஸ்வநாதர் கோவிலுக்கு எதிர்புறம் இக்கோவில் அமைந்துள்ளது.
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள சிறிய ஊர்தான் கஜூரஹோ
கட்டிடக்கலை[தொகு]
கட்டிடமானது எளிய நீள்சதுர வடிவில் (மேடை அமைப்பில் ) உள்ளது. முக்கிய பகுதியானது சதுர குறுக்கு பிணைப்பு வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.நீள் சதுர வடிவ அமைப்பு சன்னிதியையும் , குறுக்கு நுனிகள் நான்கு துருத்து மாடத்தையும் உருவாக்குகிறது. கோவில் சுவர்கள் மாடம் போன்றே காட்சியளிக்கின்றன.இதன் சுவர்கள் சன்னதியை முழுமையாக மறைக்கும் வகையில் இல்லை. மேற்கூரை நுனியில் தூண்கள் அமைந்துள்ளன . விளிம்பு வடிவமைப்பில் யானை ( தலை, தும்பிக்கை மற்றும் இரண்டு கால்கள்). மற்றும் பக்கவாட்டில் மனித உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
பாலுணர்வைத்தூண்டும் சிற்பங்கள் மேற்கூரையின் வெளிப்புறத்தில் செதுக்கப்பட்டுள்ளன.
சிவ பெருமானார் சிலை (கழுத்தில் பாம்புடன் வலது தோளில் சூலத்தை சாய்த்து வைத்தவாறு செதுக்கப்பட்டுள்ளது ) வெளிப்புற கூரையில் சுவர் விளிம்பு வேலைப்பாடுகளுடன் இதை காண முடிகிறது
நந்தி சிற்பம்[தொகு]
நந்தி சிற்பம் (படம் பார்க்க) 2.2 மீட்டர் நீளமும் , 1.8 மீ உயரமும் கொண்டது[2]