ஏரண், பண்டைய நகரம்

ஆள்கூறுகள்: 24°5.491′N 78°9.892′E / 24.091517°N 78.164867°E / 24.091517; 78.164867
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.ஏரணின் விஷ்ணு கோயிலின் மண்டபம்

ஏரண் (Eran) (இந்தி: ऐरण) பண்டைய இந்தியாவின் தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள பண்டைய வரலாற்று நகரம் ஆகும். துவக்கால நாணயங்கள் மற்றும் கல்வெட்டுக் குறிப்புகள் இந்நகரத்தை ஏரிகிணா ஐரிகிணா (Airikiṇa) (இந்தி: ऐरिकिण) எனக் குறிப்பிட்டுள்ளது.

ஏரணின் அமைவிடம்[தொகு]

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சாகர் நகரத்தின் வடமேற்கே 75 கி மீ தொலைவில் வீணா தாலுகாவில் பீணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு ஒரு சிறு கோட்டையும் உள்ளது. [1]

குப்தப் பேரரசின் ஐரிகிணா பிரதேசம் அல்லது ஏர்கிணா பிரதேசத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமாக ஏரண் விளங்கியது.[2] பண்டைய ஏரணில் கிடைத்த 48 அடி உயர கொடி மரம் போன்ற கல்தூண்[3] குறிப்புகளின் படி, வடக்கே யமுனை ஆறு தெற்கே நர்மதை ஆறு பாயும் பரப்புகளை ஆண்ட சுரேஷ்மிசந்திரன் எனும் அரசன் புத்தகுப்தரை மகாராஜா அழைத்தார் எனக் கூறுகிறது. [4] மதுராவில் கிடைக்கப் பெற்ற, புத்தகுப்தர் ஆட்சிக் காலத்திய கௌதம புத்தரின் சிற்பத்தில் உள்ள குறிப்புகள், புத்தகுப்தர் தனது ஆட்சிப் பரப்பை வடக்கு மதுரா வரை நீட்டித்ததாக கூறுகிறது. [5]பண்டைய ஏரண் நகரத்தில் குப்தர்கள் காலத்திய நாணயங்கள், கல்வெட்டுக் குறிப்புகள் பல கிடைத்துள்ளது.

வரலாறு[தொகு]

ஏரண் நகரம் நாக குலத்தவர்களின் தலைநகரமாக விளங்கியது என மகாபாரத்தின், ஆதி பருவத்தில் கூறப்பட்டுள்ளது. [6]

மௌரியர்கள், சுங்கர்கள், சாதவாகனர்கள், சகர்கள், நாகர்கள், குப்தர்கள், ஹூணர்கள், காலச்சூரிகள் காலத்திய பழந்தொன்மை மிக்க நினைவுச் சின்னங்கள் ஏரணில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஏரணில் நடந்த பத்துக் கூட்டுத் தீக்குளிப்பு தொடர்பான பத்து நினைவுத் தூண்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. [7]

ஏரணில் கண்டெடுக்கப்பட்ட தொன்மை ஆவணங்கள்[தொகு]

ஏரண் நகரத்தில் பழமைச் சின்னங்கள், நாணயங்கள், கல்வெட்டுக் குறிப்புகள், கோயில்கள், சிற்பங்கள் முதலியன அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கப் பெற்றன. [8]

ஏரண் நாணயங்கள்[தொகு]

வரலாறு[தொகு]

மௌரியர்கள், சுங்கர்கள், சாதவாகனர்கள், சகர்கள், நாகர்கள், குப்தர்கள், ஹூணர்கள், காலச்சூரிகள் காலத்திய பழந்தொன்மை மிக்க நினைவுச் சின்னங்கள் ஏரணில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஏரண் விதிசா நாணயம்
இரண்டாம் நூற்றாண்டின் ஏரண் நாணயம்

ஏரணில் உள்ள முக்கியக் கோயில்கள்[தொகு]

1. விஷ்ணு கோயில் [9]

 • முற்கால குப்தர்கள் பாணியில் கட்டப்பட்ட கோயில் (கி பி 350)

2. வராகர் கோயில்

 • பிற்கால குபதர்கள் பாணி கோயில், கி பி 480

3. நரசிம்மர் கோயில்

 • முற்கால குப்தர்கள் பாணியிலான கோயில் கி பி 412

4. பழம் பெரும் அனுமார் கோயில்

 • நாகரி பாணி கோயில், கி பி 750

5. 48 அடி உயர கருடத் தூண்

 • பிற்கால குப்தர்கள் பாணியிலான நினைவுத் தூண், கி பி 465[10]

மேற்கோள்கள்[தொகு]

 1. (Fleet 1888, ப. 88-90)
 2. Raychaudhuri, Hemchandra (1972) Political History of Ancient India, University of Calcutta, Calcutta, p.495
 3. Dr. Mohan Lal Chadhar, Eran Ki Tamrapashan Sasnkriti, Sagar, MP 2009, pp 11,ISBN 81-89740-07-5
 4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; hcr1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 5. Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, ISBN 81-208-0592-5, pp. 226–30
 6. Mahabharata (1.57.12)
 7. Dr.Mohan Lal Chadhar. Eran ek Sanskrit Dharohar, Aayu Publication, New Delhi, 2016 ISBN 978-93-85161-26-1
 8. Dr. Mohan Lal Chadhar,'Coins of Eran' Mekal Insights, Journal of Indira Gandhi National Tribal University, Amarkantak, Vol. II No.01,January 2010. P,94
 9. Dubey, Nagesh, Eran Ki Kala, Sagar,1997,pp, 11
 10. dr.Mohan Lal Chadhar." Archaeology of Central India" Edit Book, Published by S.K. Book Agency, Dariyaganj New Delhi, 2017 ISBN 978-93-8315-881-2

ஆதார நூற்பட்டியல்[தொகு]

 • Bajpai, Krishnadutta D. (1967). Sagar Through the Ages. New Delhi. 
 • Bajpai, Krishnadutta D. (1996). Indian Numismatic Studies. New Delhi. 
 • Bajpai, Krishnadutta D. (2003). S. K. Bajpai. ed. Indological Researches in India: Selected Works of Prof. K. D. Bajpai. Delhi: Eastern Book Linkers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7854-025-8. 
 • John Faithfull Fleet (1888). Corpus Inscriptionum Indicarum. 3. Calcutta: Government of India, Central Publications Branch. 
 • Chadhar, Mohanlal. (2009). Eran ki Tamrapashan Sanskriti. Sagar Madhya Pradesh: ISBN 81-89740-07-5. 
 • Chadhar, Mohanlal. (2016). Eran Ek Sanskrit Dharohar. New Delhi: ISBN 978-93-85161-26-1. 
 • Chadhar, Mohanlal. (2016). Eran Ek Parichay. Amarkantak Madhya Pradesh: ISBN 978-81-910189-7-4. 
 • Chadhar, Mohanlal. (2017). Art,Architecture and Archaeology of India. New Delhi: ISBN 978-93-8183-987-4. 
 • Chadhar, Mohanlal. (2017). Archaeology of Central India. New Delhi: ISBN 978-93-8315-881-2. 
 • வெளி இணைப்புகள்[தொகு]

  "https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரண்,_பண்டைய_நகரம்&oldid=3519938" இருந்து மீள்விக்கப்பட்டது