தசாவதாரக் கோயில்

ஆள்கூறுகள்: 24°31′37″N 78°14′24″E / 24.52694°N 78.24000°E / 24.52694; 78.24000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தசாவதாரக் கோயிலின் நுழைவாயில்
ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட பெருமாள், கி பி ஐந்தாம் நூற்றாண்டுக் கோயில்[1]

விஷ்ணு கோயில் அல்லது தசாவதாரக் கோயில் (Vishnu Temple), குப்தர்கள் காலத்திய கோயிலாகும். இக்கோயில் மத்திய இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள தியோகர் எனும் ஊரில் உள்ளது. இக்கோயில் ஏறத்தாழ கி பி 500-ஆம் ஆண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.[2] பண்டைய இந்து சமயக் கோயில்களில் இன்றளவும் உள்ள மணற்கல்லால் கட்டப்பட்ட கோயிலாகும்.[2] இக்கோயில் வளாகத்தில் விஷ்ணுவின் தசாவதாரக் காட்சிகளை வெளிப்படுத்தும் அழகிய சிற்பங்களும் மற்றும் சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் உள்ளது.[3] இக்கோயில் குப்தர்களின் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலையை ஆராய உதவும் ஆதாரங்கள் அதிகம் கொண்டதாகும்.[4] இக்கோயில் பஞ்சயாதன கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றாகும்.

இக்கோயில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.[2] இக்கோயிலில் இந்து சமய கடவுளர்களின் சிற்பங்களும், சின்னங்களும் உள்ளது.[5] இக்கோயில் மணற்கல் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டதாகும்.[5]

இந்த தசாவதாரக் கோயில் குப்தர்களின் அழகிய இந்துக் கட்டிடக் கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது.[2] கி பி ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது.[6][7][8][9]

வரலாறு[தொகு]

இடது: ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட திருமால்.வலது: ஆதிசேஷன் மீது அமர்ந்த நிலையில் விஷ்ணு இடது: ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட திருமால்.வலது: ஆதிசேஷன் மீது அமர்ந்த நிலையில் விஷ்ணு
இடது: ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட திருமால்.வலது: ஆதிசேஷன் மீது அமர்ந்த நிலையில் விஷ்ணு

திருமாலுக்கு அர்பணிக்கப்பட்ட குப்தர்களின் இக்கோயிலை, ஆங்கிலேயரான கேப்டன் சார்லஸ் ஸ்டிராகன் என்பவர் முதலில் கண்டுபிடித்தார். இது வட இந்தியாவின் முதல் பஞ்சயாதனக் கோயில் ஆகும்.[10][11]அலெக்சாண்டர் கன்னிங்காம் என்ற பிரித்தானியர் இக்கோயிலுக்கு தசவதாரக் கோயில் எனப் பெயரிட்டார்.

கோயில் கட்டிட அமைப்பு[தொகு]

இக்கோயில் பஞ்சயாதன கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றாகும். தசாவதாரக் கோயில், வட இந்தியாவில் விமானத்துடன் கட்டப்பட்ட முதல் கோயிலாகும். இக்கோவிலின் அடித்தளத்தளத்தில் தாழ்வாரமும், உயரமான பீடத்துடன் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் பாழடைந்த நிலையில் இருந்தபோதும் "நிர்ப்பந்திக்கும் முன்னிலையில்" உள்ளது. மேற்கு திசை நோக்கிய இக்கோயிலின் முக்கிய கருவறையின் மூலவர் மீது சூரிய ஒளி விழும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது.

சிற்பங்கள்[தொகு]

நர-நாராயாணர்களின் சிற்பம்
நர-நாராயாணர்களின் சிற்பம்
இடது:பள்ளி கொண்ட பெருமாளின் காலைப் பிடித்துவிடும் இலக்குமியின் சிற்பம். வலது: கஜேந்திர மோட்சக் காட்சி இடது:பள்ளி கொண்ட பெருமாளின் காலைப் பிடித்துவிடும் இலக்குமியின் சிற்பம். வலது: கஜேந்திர மோட்சக் காட்சி
இடது:பள்ளி கொண்ட பெருமாளின் காலைப் பிடித்துவிடும் இலக்குமியின் சிற்பம். வலது: கஜேந்திர மோட்சக் காட்சி

தசாவதாரக் கோயில் சுவர்களில் புனித ஆறுகளின் தெய்வங்களான யமுனை மற்றும் கங்கை, நர-நாராயணன், கஜேந்திர மோட்சம், ஆதிசேஷனை படுக்கையாக கொண்ட திருமால் [12][13], ஆதிசேஷனை இருக்கையாக கொண்ட பெருமாள் சிற்பங்கள் உள்ளது.[14][15][16][17] கோயில் சுவரின் கீழ் வரிசையில் திரௌபதியுடன் பாண்டவர்கள் நின்றிருக்கும் சிற்பங்கள் உள்ளது.

கோயிலின் பக்கச் சுவர்களிலும், பின்பக்கச் சுவர்களிலும் விஷ்ணுவின் தசவதாரக் காட்சிகளை வெளிப்படுத்தும் நரசிம்மர் மற்றும் வராகம், சிற்பங்கள் உள்ளது.[18]

தேவகி தான் சிறையில் பெற்றேடுத்த கிருஷ்ணரை வசுதேவரிடம் கொடுக்கும் காட்சியை சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் தற்போது புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.[19]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Hindu Art;Vishnu". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2010-03-25.
 2. 2.0 2.1 2.2 2.3 Dehejia, Vidya. Indian Art. New York, NY: Phaidon Press Limited, 1997, p. 143
 3. Rowland, Benjamin. The Art and Architecture of India. Kingsport, Tennessee: Kingsport Press, Inc., 1953 p. 224
 4. Mitter, Partha. Indian Art. New York: Oxford University Press, 2001. p. 42
 5. 5.0 5.1 Dye, Joseph. The Arts of India. Virginia Museum of Fine Arts. 2001. p. 112
 6. Vincent Arthur Smith, Art of India. Parkstone International, 2012.
 7. K. Chakrabarti, The Gupta Kingdom. UNESCO.
 8. Carmel Berkson, Elephanta: The Cave of Shiva. Motilal Banarsidass Publ., 1999.
 9. Dr. H. P. Ray, Narratives in stone: The Ramayana in early deccan பரணிடப்பட்டது 2015-07-23 at the வந்தவழி இயந்திரம். The Oxford Centre for Hindu Studies, 2005.
 10. "Incredible Uttar Pradesh :: All Places Of Uttar Pradesh Tourism". Deograh. Archived from the original on 2010-03-23. பார்க்கப்பட்ட நாள் 2010-01-07.
 11. Lubotsky, Alexander. Isomorphic Reconstruction Map of Sarvodhbhadra temple or the Vishnu temple of Deogarh (PDF). pp. 9–10.
 12. Titze p.103
 13. "Ancient Indian Treasures Exhibition". Government of India. Archived from the original on 2007-05-28. பார்க்கப்பட்ட நாள் 2010-01-05.
 14. "Deogarh". Uttra Pradesh Tourism. Archived from the original on 2010-01-03. பார்க்கப்பட்ட நாள் 2010-01-05.
 15. "Fortress of the gods". The Hindu. 2003-08-24. Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2010-01-05.
 16. Studies in south Asian culture, pp.31, 62-69
 17. Studies in south Asian culture, p.29
 18. Bhoothalingam, Mathuram (2016). S., Manjula (ed.). Temples of India Myths and Legends. New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. pp. 7–10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1661-0.
 19. Solis, Benjamín Preciado- (1984). The Krishna cycle in the puranaas: themes and motifs in a heroic saga. Motilal Banarsidass. p. 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0895812266. பார்க்கப்பட்ட நாள் 2010-01-06. {{cite book}}: |work= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]


விக்கிமீடியா பொதுவகத்தில்,
Deogarh
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தசாவதாரக்_கோயில்&oldid=3792182" இலிருந்து மீள்விக்கப்பட்டது