சிர்பூர் நினைவுச்சின்னங்களின் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிர்பூர் நினைவுச்சின்னங்களின் தொகுதி
8th century couple embraced and mouth kissing at Tivara Deva temple, she stands on his feet, Sirpur monuments Chhattisgarh India.jpg
கிபி 8ஆம் நூற்றாண்டின் காதலர்களின் சிற்பம், திவாரா கோயில், சிர்பூர், சத்தீசுகர்
அமைவிடம்சிர்பூர், மகாசமுந்து மாவட்டம், சத்தீசுகர், இந்தியா
அருகில் உள்ள நகரம்ராய்ப்பூர்
ஆள்கூற்றுகள்21°20′43″N 82°11′05″E / 21.345225°N 82.184814°E / 21.345225; 82.184814ஆள்கூறுகள்: 21°20′43″N 82°11′05″E / 21.345225°N 82.184814°E / 21.345225; 82.184814
கட்டப்பட்டது5–12ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கும் அமைப்புஇந்தியத் தொல்லியல் ஆய்வகம்

சிர்பூர் நினைவுச்சின்னங்களின் தொகுதி (Sirpur Group of Monuments) தொல்லியல் களமும், இந்து, சைனம் மற்றும் பௌத்த சமயங்களின், கிபி 5 முதல் 12ஆம் நூற்றாண்டுக் காலத்திய நினைவுச் சின்னங்களைக் கொண்டது. இது சத்தீசுகர் மாநிலத்தின் மகாசமுந்து மாவட்டம், சிர்பூர் எனும் சிற்றூரில் உள்ளது. [1] சிர்பூர் நினைவுச்சின்னங்களின் தொகுதி, சத்தீசுகர் மாநிலத் தலைநகரான ராய்ப்பூருக்கு கிழக்கே 78 கிலோ மீட்டர் தொலைவில், மகாநதி ஆற்றின் கரை அருகே உள்ளது.[2][3]

பண்டய சிர்பூர் நகரம், தெற்கு கோசல நாட்டை ஆண்ட சரபாபூரிய அரசகுலத்தவர்களின் தலைநகராக கிபி 5 முதல் 6-ஆம் நூற்றாண்டு முடியவும், பின்னர் சந்திர குல மன்னர்களின் தலைநகராக 9 முதல் 12ஆம் நூற்றாண்டு முடிய இருந்தது. தெற்கு கோசல நாட்டின் சிர்பூர் நகரம் கிபி 5 முதல் 12 முடிய இந்து, சமண மற்றும் பௌத்த சமயத்தவர்களின் புகழிடமாக விளங்கியது.[1] கிபி 7-ஆம் நூற்றாண்டில் சீன பௌத்த அறிஞர் யுவான் சுவான் சிர்பூர் நகரத்திற்கு யாத்திரையாக வந்துள்ளார். அண்மையில் நடைபெற்ற அகழாய்வில் சிர்பூர் நகரத்தில் 12 பௌத்த விகாரைகளும், 1 சமணக் கோயிலும், ஒரே கல்லால் செய்த புத்தர் மற்று மகாவீரர் சிற்பங்களும் மற்றும் 22 சிவன் கோயில்களும், 5 விஷ்ணு கோயில்கள், சக்தி மற்றும் தாந்திரிகக் கோயில்களும், தரையடி தானியக் களஞ்சியமும், 6-ஆம் நூற்றாண்டின் குளியல் வீடும் கண்டெடுக்கப்பட்டது.

மன்னிப்பு கோரும் பெண் சிற்பம்
இடது: துர்கை எனும் மகிசாசூரமர்தனி; வலது:குழந்தையை கையில் ஏந்திய பெண்

இந்து சமய நினவுச் சின்னங்கள்[தொகு]

இலட்சுமணன் கோயில், சிர்பூர்

சிர்பூர் தொல்லியல் களத்தில் நடைபெற்ற அகழாய்வில் கிபி 7-ஆம் நூற்றாண்டின் இலட்சுமணன் கோயில், இராமர் கோயில், சிவன் கோயில், காந்தேஷ்வர் கோயில், பாலேஷ்வர் மகாதேவர் கோயில், சுரங் திலா கோயில்கள், சக்திக் கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காந்தேஷ்வர் சிவன் கோயில் சுவரில் கலை வேலைப்பாடுகள்
சுரங் திலா கோயில்கள்

பௌத்த & சமண நினைவுச்சின்னங்கள்[தொகு]

சிதிலமடைந்த சிர்பூர் விகாரத்தின் புத்தரின் சிலை

சிர்பூர் தொல்லியல் களத்தில் ஆனந்த பிரபு விகாரை, சுவஸ்திகா விகாரை, திவார் தேவ் விகாரை மற்றும் ஒரு சமணப் பள்ளியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் அருகாட்சியகம்[தொகு]

சிர்பூர் தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட நினைவுச் சின்னங்களைக் கொண்டு, சிர்பூரில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அருங்காட்சியகம் ஒன்றை பொது மக்கள் பார்வைக்கு திறந்து வைத்துள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Atula Kumar Pradhan and Shambhoonath Yadav (2013), Sirpur - A unique township of early medieval India, Proceedings of the Indian History Congress, Vol. 74 (2013), pp. 854-864
  2. Sirpur raipur.gov.in
  3. SIRPUR : A Goldmine of History பரணிடப்பட்டது 2014-02-14 at the வந்தவழி இயந்திரம் Prasar Bharti
  4. http://asi.nic.in/asi_monu_tktd_chts_laxman.asp

வெளி இணைப்புகள்[தொகு]