மண்டபேஷ்வர் குகைகள்

ஆள்கூறுகள்: 19°14′42″N 72°51′13″E / 19.2451°N 72.8537°E / 19.2451; 72.8537
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்டபேஷ்வர் குகைகள்
மண்டபேஷ்வர் குகை
மண்டபேஷ்வர் குகைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
மண்டபேஷ்வர் குகைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
அமைவிடம்போரிவலி, மகாராட்டிரம், இந்தியா
ஆள்கூறுகள்19°14′42″N 72°51′13″E / 19.2451°N 72.8537°E / 19.2451; 72.8537
Difficultyஎளிது

மண்டபேஷ்வர் குகைகள் (Mandapeshwar Caves) இந்தியாவில் மகாராட்டிராவில் உள்ள மும்பையின் புறநகர் பகுதியான மவுண்ட் பாயின்சூர் அருகே உள்ள போரிவலி என்ற இடத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 8 ஆம் நூற்றாண்டின் குகைக் குடைவரைக் கோயிலாகும்.[1] பிராமணர்களால் ஆக்கிரமிக்கப்படுவதற்கு முன்னர் இக்குகைகள் முதலில் புத்த விகாரங்களாக இருந்துள்ளன.[2]

இருப்பிடம்[தொகு]

இந்த குகைகள் இந்தியாவில் மகாராட்டிராவிலுள்ள மும்பையின் புறநகர் பகுதியான மவுண்ட் பாயின்சூர் அருகே உள்ள போரிவலி என்ற இடத்தில் அமைந்துள்ளது. முதலில் குகைகள் தகிசார் ஆற்றின் கரையில் இருந்தன. ஆனால் பின்னர் ஆற்றின் போக்கு மாறியது.[3] இப்பகுதியின் பெயர் இந்த கோவிலில் இருந்து பெறப்பட்டது என்று நம்பப்படுகிறது, போரிவலியின் கிழக்குப் பகுதியில் உள்ள சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவில் அமைந்துள்ள கான்கேரி குகைகளை போர்த்துகீசிய தேவாலய கட்டட இடிபாடுகள் குகையின் மேல் பகுதியில் காணப்படுகின்றன. இம்மாகுலேட் கன்செப்சன் தேவாலயம் அதன் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. குகைக்கு முன் உள்ள திறந்த வெளி மைதானம் அங்குள்ள மக்கள் விளையாடுமிடமாகவும், வண்டிகள் நிறுத்தும் பகுதியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த குகைக்கு முன்னால் சுவாமி விவேகானந்தர் சாலை அமைந்துள்ளது.[1][4]

வரலாறு[தொகு]

குகைகள் மீது இடிபாடுகள்
இடிபாடுகள் உள்ள ஒரு பாதை

மண்டபேஷ்வர் குகை என்ற பெயர், கடவுள் வாழும் இடம் என்ற பொருள்படும். இந்த குகைகள் ஏறக்குறைய 1500 முதல் 1600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என நம்பப்படுகிறது.[1] கிட்டத்தட்ட இதே காலங்களில் ஜோகீஸ்வரி குகைகளும் கட்டப்பட்டது (கி.மு 520-550 முதல் கட்டப்பட்டது).[4]

இந்த குகைகள் முதலில் புத்த பிக்குகளால் வெட்டப்பட்டன.[2] இந்தியாவின் ஆரம்பகால கல்வெட்டு கோயில்கள் மற்றும் பாறை கலை ஆகியவை பௌத்த பிக்குகளால் உருவாக்கப்பட்டது. இவர்கள் புத்தரின் செய்தியினைப் பரப்புபவர்களாக இருந்தனர். மகாராஷ்டிரா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள பல மலைச்சிகரங்களும் அவர்களின் இலக்காகும். மும்பையைச் சுற்றியுள்ள மலைகள் கடல் வணிக வழித்தடங்களாக இருந்தன. கன்ஹேரி குகைகளின் ஆக்கிரமிப்பின் போது பெளத்த பிக்குகள் மண்டபத்தில் ஓவியங்கள் வரைந்த பின்னர் மற்றொரு இடத்தைக் கண்டுபிடித்தனர். பௌத்த துறவிகளால் இந்த குகை உருவாக்கப்பட்டு, பின்னர் வர்ணங்கள் வரைவதற்கு பாரசீகர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

இந்த குகைகளில் உள்ள சிற்பங்கள், ஜோகேஸ்வரி குகைகளில் காணப்படும் சிற்பங்கள் செதுக்கப்பட்ட அதே காலப்பகுதியில் செதுக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய மண்டபத்தையும், முக்கிய கர்ப்பகிரகத்தையும் கொண்டிருக்கிறது.

பயன்பாடு[தொகு]

இந்த குகை காலப்போக்கில், உலக போரின் போது வீரர்கள் பயன்படுத்தி வந்தனர், பொதுமக்களும் தங்கியிருந்தனர், ஆரம்பகால போர்த்துகீசியர்கள் அதை பிரார்த்தனை நடத்துமிடமாக பயன்படுத்தினர். இந்த குகைகள் வெவ்வேறு ஆட்சியாளர்களின் தொடர்ச்சியான படையெடுப்பிற்குச் சாட்சியாக இருந்தன, ஒவ்வொரு முறையும் குகைகள் வேறொரு காரணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. சில நேரங்களில் இராணுவத்தினரால் அல்லது சில நேரங்களில் அகதிகளால் வீடுகள் போன்று பயன்படுத்தப்பட்டன. இந்த காலகட்டத்தில் தனித்துவமான ஓவியங்கள் மோசமாகத் தகர்க்கப்பட்டன. 1739 ஆம் ஆண்டு இந்த பகுதியில் மராத்தியர்களின் படையெடுப்புக்குப் பிறகு, பல ஆண்டுகள் இந்த பகுதி வனாந்திரமாக இருந்தது. குகைகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு இந்திய தொல்லியல் சங்கத்தின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இடிபாடுகள்[தொகு]

இப்போது சுவர்களில் காணப்படுகிற பெரும்பாலான ஓவியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன, அவை அதன் புகழ்பெற்ற கடந்த காலத்தை நினைவூட்டுகின்றன. தேவாலயம் அதன் கல்லறைக் குகை வளாகங்களுக்கு மேலே அமைந்துள்ளது. குகைகளின் மேலே ஒரு பழைய கட்டிட இடிபாடுகள் உள்ளன. இந்த அழிவுகள் 1544-ல் கட்டப்பட்ட ஒரு பழைய தேவாலயத்திற்குச் சொந்தமானது. இந்த இடிபாடுகள் இந்திய தொல்லியல் சங்கத்தின் பாதுகாப்பின் கீழ் உள்ளன.

சிற்பங்கள்[தொகு]

மும்பையில் நான்கு கல்வெட்டுக் குகைக்கோவில்கள் உள்ளன: எலிஃபண்டா குகைகள், ஜோகீஸ்வரி குகைகள், மகாகாளி குகைகள், மண்டபேஸ்வர் குகைகள் ஆகியன. நான்கு குகைகளும் ஒரே சிற்ப வகைகளைக் கொண்டுள்ளன. மண்டபேஸ்வரில் உள்ள சிற்பங்கள் குப்த சாம்ராஜ்யத்தின் பிற்பகுதியிலோ அல்லது சில காலம் கழித்தோ ஆரம்பிக்கப்பட்டன. எலிஃபண்டா தீவு 1987 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டது.  

மண்டபேஷ்வர் குகைகளில் நடராசர், சதாசிவன் மற்றும் அர்த்னாரீஷ்வர் போன்ற தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. மேலும் கணேசன், பிரம்மா மற்றும் விஷ்ணு சிலைகளையும் கொண்டுள்ளது. இந்த படைப்புகளில் இந்து கடவுள்களின் மற்றும் தெய்வீகப் புராணக் கதைகள் சித்தரிக்கப்பட்டன. இன்றும் கூட பார்வதியுடன் சிவனின் திருமணத்தை குறிக்கும் ஒரு விரிவான சிற்பம் இந்த குகைகளின் தெற்கே ஒரு பெரிய சதுர ஜன்னல் வழியாக பார்க்கலாம். குகைகள் ஒரு தொல்பொருள் மரபுரிமைத் தளமாக அறிவிக்கப்பட்டு, சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.[5]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Gaur, Abhilash (25 January 2004). "Pay dirt: Treasure amidst Mumbai's trash". /www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2009-11-04.
  2. 2.0 2.1 "An interesting example is the Mandapeshwar cave near Borivli which was once a Buddhist Vihara. It was later occupied by the Brahmans" Kail, Owen C. (1984). Elephanta, the island of mystery. Taraporevala. https://books.google.com/books?id=ylweAAAAMAAJ. 
  3. Bavadam, Lyla (18–31 July 2009). "In a shambles". Frontline இம் மூலத்தில் இருந்து 2013-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125062548/http://www.hinduonnet.com/thehindu/fline/fl2615/stories/20090731261506600.htm. பார்த்த நாள்: 2011-01-22. 
  4. 4.0 4.1 "Suburban Caves Proposal". Collective Research Initiatives trust, Mumbai. 1 September 2004. Archived from the original on 2009-05-08. பார்க்கப்பட்ட நாள் 2009-11-04.
  5. "List of the protected monuments of Mumbai Circle district-wise" (PDF). Archived from the original (PDF) on 2016-09-10. பார்க்கப்பட்ட நாள் 2019-03-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டபேஷ்வர்_குகைகள்&oldid=3803118" இலிருந்து மீள்விக்கப்பட்டது