உள்ளடக்கத்துக்குச் செல்

தெலிகா கோயில்

ஆள்கூறுகள்: 26°13′15.2″N 78°09′53.6″E / 26.220889°N 78.164889°E / 26.220889; 78.164889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலிகா மந்திர்
கோயிலின் முன் தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கூவாலியர் கோட்டை
புவியியல் ஆள்கூறுகள்26°13′15.2″N 78°09′53.6″E / 26.220889°N 78.164889°E / 26.220889; 78.164889
சமயம்இந்து சமயம்
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்குவாலியர்

தெலிகா கோயில் (Telika Temple) தெலி கா மந்திர் என்றும் அழைக்கப்படும் இது, இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் கோட்டைகுள் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவிலாகும். சிவன், விஷ்ணு மற்றும் சப்தகன்னியர் போன்ற தெய்வங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் 9ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கட்டப்பட்டது. [1]

இது இந்துக் கோவில்களிலே ஒரு வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது வழக்கமான சதுர வடிவ கர்ப்பக்கிருகத்திற்கு பதிலாக செவ்வக வடிவில் உள்ளது. இது இந்துக் கோயில் கட்டிடக்கலை பாணியின் கூறுகளையும், திராவிடக் கட்டிடக்கலையையும் ஒருங்கிணைக்கிறது. கூர்ஜர-பிரதிகார-கோபகிரி பாணி வட இந்திய கட்டிடக்கலை அடிப்படையிலும் இந்தக் கோயில் அமைந்துள்ளது.[2][3][4]

கட்டிடக்கலையில் "இசைக் கோர்வைகள்" அடிப்படையிலான வடிவமைப்பிற்கு இந்தக் கோயில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.[5] ஜெர்மன் கலை வரலாற்றாசிரியர் ஹெர்மன் கோய்ட்ஸ் பிற்கால குப்தர் கால இந்தியக் கலையின் தலைசிறந்த படைப்பாக அழைத்தார்.[6]

அமைவிடம்[தொகு]

இந்தக் கோயில் வடக்கு மத்திய பிரதேசத்தின் குவாலியர் கோட்டைக்குள் அமைந்துள்ளது. இந்த நகரம் முக்கிய நெடுஞ்சாலைகளான என்.எச் 44 மற்றும் 46 (ஆசிய நெடுஞ்சாலை 43 மற்றும் 47), ஒரு தொடர்வண்டி நிலையம் மூலமும், விமான நிலையம் மூலமும் இணைக்கப்பட்டுள்ளது. இது இடைக்காலத்தின் பிற வரலாற்று இந்து மற்றும் சமண கோயில்களுக்கு அருகில் அமைந்துள்ளது. அதே போல் வைணவம், சைவம், சாகிசக் கோயில்களின் முக்கிய குழுவான பதேஷ்வர் இந்துக் கோயில்களுக்கு அருகிலுள்ள படேசுவர் கோயில்கள் அருகிலும் உள்ளது. இங்குள்ள பல கோயில்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட சிறிய பஞ்சரத பாணியிலான கோயில்களின் இடிபாடுகளாக உள்ளன.[7] 22 கோயில்களைக் கொண்ட நரேசர் கோயில் வளாகமும்,[8] மஹுவா கோயில்களில் பெரும்பாலானவையும் 6ஆம் மற்றும் 10ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்துக் கட்டிடக்கலையின் நாகரா பாணியில் பல்வேறு மாறுபாடுகளையும், வாஸ்து மண்டல சமச்சீர் கொள்கைகளை பயன்படுத்துவதையும் இவை எடுத்துக்காட்டுகின்றன.[9][10]

சீரமைப்புக்கு முன்னர் கோயிலின் தோற்றம் (1869)
சீரமைப்பின்போது கோயிலின் தோற்றம் (1882)
சீரமைக்கப்பட்ட பின்னர், கோயிலி தோற்றம் (1885), சிற்பத் தோட்டங்களும் இணைக்கப்பட்டது.

குவாலியரின் பழைய நகரத்திற்குள் உள்ள வரலாற்றுக் கோயில்களில் தெலி கா மந்திரும் ஒன்றாகும். இது பழைய நகரத்தின் நடுவில் உள்ளது. இது ஒரு உயரமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இது கோட்டையின் வெவ்வேறு இடங்களிலிருந்து தனித்து நிற்கிறது.[11][12][13] தெலி கா மந்திர் மற்றும் பிற வரலாற்றுக் கோயில்களின் தளம் ஆரம்பகால கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இவற்றில் சில நகரத்தை கோபகிரி என்று குறிப்பிடுகின்றன.[14]

பெயர் காரணம்[தொகு]

கோவிலின் பெயரின் தோற்றம் பற்றிய தெளிவான விவரம் இல்லை. தெலி கா மந்திர் என்றால் "எண்ணெய் மனிதர் கோயில்" என்று பொருள். ஆனால் கல்வெட்டுகளோ அல்லது நூல்களோ இத்தகைய பெயரை உறுதிப்படுத்தவில்லை. வரலாற்றாசிரியர் ஆலன் கருத்துப்படி, இந்த பெயருக்கு திருப்திகரமான விளக்கம் இல்லை.[15] இந்தக் கோயில் அரசர்கள், அரச வர்க்கம் அல்லது பூசகர்கள் வர்க்கத்தை விட எண்ணெய் வணிக சாதியினரால் கட்டப்பட்டது என்று உள்ளூர் நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன.[16]

புகைப்படங்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Margaret Prosser Allen (1991). Ornament in Indian Architecture. University of Delaware Press. pp. 203–204. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87413-399-8.
 2. Encyclopaedia of Indian Temple Architecture. American Institute of Indian Studies.
 3. Malwa Through The Ages. Motilal Banarsidass.
 4. Rediscovering the Hindu Temple: The Sacred Architecture and Urbanism of India. Cambridge Scholars Publishing.
 5. Michael W. Meister (1983), Geometry and Measure in Indian Temple Plans: Rectangular Temples, Artibus Asiae, Vol. 44, No. 4 (1983), page 269, 278-280
 6. Herman Goetz (1955), The Last Masterpiece of Gupta Art: The Great Temple of Yasovarman of Kanauj ('Telika Mandir') at Gwalior, Art and Letters, Vol.
 7. Group of temples at Batesar , ASI Bhopal Circle (2014)
 8. Naresar Temples, ASI Bhopal Circle (2014)
 9. Margaret Prosser Allen (1991). Ornament in Indian Architecture. University of Delaware Press. pp. 203–204, 211–212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87413-399-8.
 10. Gudrun Bühnemann (2003). Maònòdalas and Yantras in the Hindu Traditions. BRILL. pp. xiv, 259–266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-12902-2.
 11. Teli Mandir, A Cunningham, pages 356-361
 12. Margaret Prosser Allen (1991). Ornament in Indian Architecture. University of Delaware Press. pp. 203–204. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87413-399-8.Margaret Prosser Allen (1991).
 13. Aline Dobbie (2004). India: The Tiger's Roar. Melrose Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9548480-2-6.
 14. Gwalior Fort: Gwalior, ASI Bhopal Circle, Government of India
 15. Margaret Prosser Allen (1991). Ornament in Indian Architecture. University of Delaware Press. pp. 203–204. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87413-399-8.Margaret Prosser Allen (1991).
 16. Goodearth Publications. Temples of Madhya Pradesh. Goodearth Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80262-49-9.

நூலியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலிகா_கோயில்&oldid=4000079" இலிருந்து மீள்விக்கப்பட்டது