பெங் மிலியா
பெங் மிலியா Beng Mealea | |
---|---|
பெங் மிலியா கோவிலின் சுவர்களும் சாளரங்களும் | |
ஆள்கூறுகள்: | 13°28′35″N 104°14′18″E / 13.47639°N 104.23833°E |
பெயர் | |
பெயர்: | பிரசாத் பெங் மிலியா |
அமைவிடம் | |
நாடு: | கம்போடியா |
மாகாணம்: | சியாம் ரீப் |
அமைவு: | அங்கோர் கோவில்களுக்கு 40 கிமீ கிழக்கே |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | திருமால் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | அங்கோர் வாட் |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | கிபி 12ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் |
அமைத்தவர்: | இரண்டாம் சூரியவர்மன் |
பெங் மிலியா (Beng Mealea அல்லது Bung Mealea, கம்போடிய மொழி: ប្រាសាទបឹងមាលា, தாமரைத் தடாகம்) என்பது கம்போடியாவில் அமைந்துள்ள ஒரு கோவில் ஆகும். இது அங்கோர் வாட் கட்டிட அமைப்பில் கட்டப்பட்டது.
இரண்டாம் சூரியவர்மனால் கி.பி 12 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட இவ்வாலயம் சியாம் ரீப் நகரில் இருந்து 77 கிமீ தொலைவிலும், அங்கோர் வாட் கோயிலில் இருந்து 40 கிமீ கிழக்கேயும் அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு இந்துக் கோயிலாக நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும், பௌத்தக் கருத்துகளுடன் கூடிய சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.[1]மணற்கற்களால் கட்டப்பட்ட இவ்வாலயத்தை பெரும் மரங்கள், மற்றும் பற்றைகள் சூழ்ந்துள்ளன. பல ஆண்டுகளாக இக்கோவிலுக்குள் செல்ல முடியாமல் இருந்தது. தற்போது இதற்கு சியாம் ரீப் நகரில் இருந்து செல்வதற்கு பாதைகள் உள்ளன.
இதன் கட்டிட அமைப்பு அங்கோர் வாட் கோவிலை ஒத்திருப்பதால இது இரண்டாம் சூரியவர்மனால் 12ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.[1]
படக் காட்சியகம்
[தொகு]-
பெங் மிலியாவில் உள்ள ஒரு வட்ட அகழி
-
பெங் மிலியாவில் நாக வழிபாடு
-
நூலகம்
-
சுவர்ச் சிற்பங்கள்
-
ஐந்து-தலை நாகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Freeman, Michael; Jacques, Claude (2006). Ancient Angkor. River Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 974-8225-27-5.
வெளி இணைப்புகள்
[தொகு]- A Pilgrimage to Beng Mealea by Willard Van De Bogart
- Beng Mealea re-visited on Andy Brouwer's website
- "Death of an Angel: How antiquities theft destroys Cambodia's past...and future" - Article about Beng Mealea site damage பரணிடப்பட்டது 2010-03-16 at the வந்தவழி இயந்திரம்
- Beng Mealea - Gallery and Photographic Documentation by khmer-heritage.de
- Photos from inside Beng Mealea
- இரண்டாம் சூர்யவர்மனின் Beng Mealea ஆலயம்