ஹேலியோடோரஸ் தூண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹோலியோடோரஸ் தூண்

ஹேலியோடோரஸ் தூண் (Heliodorus pillar) மத்திய இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தில், விதிஷா நகரத்திற்கு அருகில், சாஞ்சியிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ளது.[1]

இத்தூண், இந்து சமயத்திற்கு மதம் மாறியவரும், சுங்கப் பேரரசில், இந்தோ கிரேக்க நாட்டின் தூதுவரும், கிருஷ்ண பக்தருமான ஹேலியோடோரஸ் (Heliodorus (votive erector) என்பவரால், கிமு 113-இல் பகவான் கிருஷ்ணருக்காக நிறுவப்பட்டது. கிருஷ்ணர் கோயில் முன் அமைந்த இத்தூணின் உச்சியில் கருடச் சிற்பம் அமைந்துள்ளது.[2]

கல்வெட்டுக் குறிப்புகள்[தொகு]

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கல்வெட்டு குறித்தான அறிவிப்புப் பலகை
ஹேலியோடோரசிஸ் தூணின் முதல் கல்வெட்டுக் குறிப்புகள், கி மு 110

ஹேலியோடோரஸ் தூணில் இரண்டு கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது.

பிராமி எழுத்தில் பிராகிருத மொழியில் உள்ள முதல் கல்வெட்டு, ஹேலியோடோரசின் நிலையையும், அவருக்கும் சுங்கப் பேரரசு மற்றும் இந்தோ கிரேக்க நாட்டிற்கும் இருந்த அரசியல் உறவுகளையும் விளக்குகிறது.

இரண்டாவது கல்வெட்டில், கருடனை வாகனமாகக் கொண்ட வாசுதேவனின் பக்தரும், தக்சசீலாவின் தியோன் என்பவரின் மகனுமான ஹேலியோடோரசன் பெயர் கொண்ட நான், யவன நாட்டின் சக்கரவர்த்தியான ஆண்டியல்கிதாஸ் என்பவரால், காசி நாட்டு மன்னரவையில் தூதராக நியமிக்கப்பட்டேன் என உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 23°32′59″N 77°48′00″E / 23.5496°N 77.7999°E / 23.5496; 77.7999

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேலியோடோரஸ்_தூண்&oldid=3437233" இருந்து மீள்விக்கப்பட்டது