ஆத்திபாத பிராமி கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்திபாத கோசுண்டி கல்வெட்டுக்கள்
கிமு 2 அல்லது முதல் நூற்றாண்டின் உடைந்த சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட ஆத்திபாத் கோசுண்டி கல்வெட்டுக்கள்
செய்பொருள்கருங்கல்
எழுத்துசமசுகிருதம்
உருவாக்கம்கிமு 2 அல்லது முதலாம் நூற்றாண்டு
இடம்நாகரி, சித்தோர்கார், இராஜஸ்தான், இந்தியா
தற்போதைய இடம்அரசு அருங்காட்சியகம், உதய்ப்பூர்
உடைந்த ஆத்திபாத கல்வெட்டின் பகுதி
உடைந்த ஆத்திபாத கல்வெட்டின் பகுதி
ஆத்திபாத கோசுண்டி கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்ட நிலத்தின் பரப்பு[1]

ஆத்திபாத கோசுண்டி கல்வெட்டுக்கள் (Hathibada Ghosundi Inscriptions), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் சித்தோர்கார் நகரத்திற்கு வடக்கே 8 மைல் தொலைவில் உள்ள நாகரி மற்றும் சித்தோர்காருக்கு தென்மேற்கு 3 மைல் தொலைவில் உள்ள கோசுண்டி எனும் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட, கிமு 2 அல்லது முதலாம் நூற்றாண்டுக் காலத்திய, சமசுகிருத மொழியில் பிராமி எழுத்துமுறையில் எழுதப்பட்ட கல்வெட்டுகளாகும்.[2][3] இக்கல்வெட்டுக்கள் இந்து சமயத்தின் வைணவப் பிரிவுத் தொடர்புடையதாகும். [4][5] [6][7]

இக்கல்வெட்டுக்கள் அதன் பழமைக்கும் மட்டுமல்லாது, பண்டைய இந்திய சாத்திரங்கள், சமூகம், வரலாறு மற்றும் சமய நம்பிக்கைகள் பற்றிய தகவல்களின் ஆதாரமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.[2] ஆத்திபாத கோசுண்டிக் கல்வெட்டுகளில் பண்டைய இந்துக் கடவுள்களான கிருஷ்ணர் மற்றும் பலராமர் குறித்தும், கிமு முதல் நூற்றாண்டில் அக்கடவுளர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட் ஒரு கற்கோயில் குறித்தும், பூசை முறைகள் மற்றும் ஒரு மன்னர் அசுவமேத யாகம் செய்தததைக் குறிப்பிட்டுள்ளது.[4][8][9]மேலும் இக்கல்வெட்டுக்களில் கிருட்டிணன் மற்றும் பலராமர் பகவான் விஷ்ணுவின் அவதாரங்கள் என்றும் குறித்துள்ளது.[10]

ஆத்திபாத கோசுண்டி கல்வெட்டுக்கள், அயோத்தி கல்வெட்டு மற்றும் ஹேலியோடோரஸ் தூண் கல்வெட்டுகளின் படி, பண்டைய இந்தியாவில், கிமு 2-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் கிருஷ்ணர் வழிபாடு இருந்தது என அறியமுடிகிறது.[8][11][5][12]

கிரேக்க பாக்திரியா நாட்டின் மன்னர் அகதோகிளிஸ் வெளியிட்ட பலராமர் மற்றும் கிருஷ்ணர் உருவம் பொறித்த நாணயங்கள், ஆண்டு கிமு 190 - 180[13][14]

மேற்கோள்கள்[தொகு]

  1. ASI Jaipur circle Hathiwada enclosure
  2. 2.0 2.1 D. R. Bhandarkar, Hathi-bada Brahmi Inscription at Nagari, Epigraphia Indica Vol. XXII, Archaeological Survey of India, pages 198-205
  3. Dilip K. Chakrabarti (1988). A History of Indian Archaeology from the Beginning to 1947. Munshiram Manoharlal. பக். 137–138. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-215-0079-1. https://books.google.com/books?id=iyJuAAAAMAAJ. 
  4. 4.0 4.1 Richard Salomon (1998). Indian Epigraphy: A Guide to the Study of Inscriptions in Sanskrit, Prakrit, and the Other Indo-Aryan Languages. Oxford University Press. பக். 239–240. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-509984-3. https://books.google.com/books?id=t-4RDAAAQBAJ&pg=PA84. 
  5. 5.0 5.1 Theo Damsteegt (1978). Epigraphical Hybrid Sanskrit. Brill Academic. பக். 209–211. https://books.google.com/books?id=Mf4UAAAAIAAJ&pg=PA209. 
  6. Jan Gonda (2016). Visnuism and Sivaism: A Comparison. Bloomsbury Academic. பக். 166 note 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4742-8082-2. https://books.google.com/books?id=khrmDAAAQBAJ&pg=PA166. 
  7. James Hegarty (2013). Religion, Narrative and Public Imagination in South Asia: Past and Place in the Sanskrit Mahabharata. Routledge. பக். 46 note 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-136-64589-1. https://books.google.com/books?id=qMSoAgAAQBAJ&pg=PA46. 
  8. 8.0 8.1 Gerard Colas (2008). Gavin Flood. ed. The Blackwell Companion to Hinduism. John Wiley & Sons. பக். 230–232. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-99868-7. https://books.google.com/books?id=SKBxa-MNqA8C&pg=PA230. 
  9. Rajendra Chandra Hazra (1987). Studies in the Puranic Records on Hindu Rites and Customs. Motilal Banarsidass. பக். 200–201. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0422-7. https://books.google.com/books?id=Jar4V3piCeQC&pg=PA200. 
  10. Srinivasan, Doris (1979). "Early Vaiṣṇava Imagery: Caturvyūha and Variant Forms". Archives of Asian Art 32: 50–51. பன்னாட்டுத் தர தொடர் எண்:0066-6637. 
  11. Lavanya Vemsani (2016). Krishna in History, Thought, and Culture. ABC-CLIO. பக். 37–38. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-61069-211-3. https://books.google.com/books?id=4fw2DAAAQBAJ&pg=PA37. 
  12. Julia Shaw (2013). Buddhist Landscapes in Central India: Sanchi Hill and Archaeologies of Religious and Social Change, C. Third Century BC to Fifth Century AD. Routledge. பக். 264 note 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-61132-344-3. https://books.google.com/books?id=jzkyBgAAQBAJ&pg=PA264. 
  13. Singh, Upinder (2008) (in en). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Pearson Education India. பக். 436–438. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-1120-0. https://books.google.com/books?id=H3lUIIYxWkEC&pg=PA437. 
  14. Srinivasan, Doris (1979). "Early Vaiṣṇava Imagery: Caturvyūha and Variant Forms". Archives of Asian Art 32: 50. பன்னாட்டுத் தர தொடர் எண்:0066-6637.