உள்ளடக்கத்துக்குச் செல்

யசோதர்மனின் மண்டோசோர் வெற்றித் தூண் கல்வெட்டுகள்

ஆள்கூறுகள்: 24°02′29″N 75°05′30″E / 24.0413°N 75.0918°E / 24.0413; 75.0918
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னர் யசோதர்மனின் மண்டோசோர் வெற்றித் தூண் கல்வெட்டுகள்
மண்டோசோர் வெற்றித் தூண் கல்வெட்டுகளின் பிரதி
செய்பொருள்மணற்கல் தூண்
எழுத்துசமசுகிருதம்
உருவாக்கம்கிபி 515–550
காலம்/பண்பாடுகுப்தர்கள் காலம்
கண்டுபிடிப்பு1884
இடம்சோந்தனி, மண்டோசோர், மண்டசௌர் மாவட்டம், மத்தியப் பிரதேசம்
தற்போதைய இடம்யசோதர்மன் அருங்காட்சியகம்

மன்னர் யசோதர்மனின் மண்டோசோர் வெற்றித் தூண் கல்வெட்டுகள், (Mandasor Pillar Inscriptions of Yashodharman) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மண்டசௌர் மாவட்டத்தின் தலைமையிடமான மண்டோசோர் நகரத்திற்கு தெற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேந்தனி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. கிபி 6ஆம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த, பௌத்தர்களுக்கு எதிரானவரும், கொடூரமானவருமான ஹூணர்களின் மன்னர் மிகிரகுலனை, அவ்லிக இராச்சிய மன்னர் யசோதர்மன் வெற்றி கொண்டமையை சிறப்பிக்க மணற்கல்லாலான வெற்றித் தூண் நிறுவப்பட்டது. அத்தூணில் சமசுகிருத மொழியில் மன்னர் யசோதர்மனின் போர் வெற்றிகள் குறித்து கல்வெட்டாக குறிக்கப்பட்டுள்ளது.[1] [2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Yasodharman Pillar or Victory
  2. Richard Salomon (1998). Indian Epigraphy: A Guide to the Study of Inscriptions in Sanskrit, Prakrit, and the other Indo-Aryan Languages. Oxford University Press. p. 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-535666-3.
  3. Mandasor Prasasti of Yasodharman, Primary Copy பரணிடப்பட்டது 2018-11-26 at the வந்தவழி இயந்திரம், Siddham, British Library

வெளி இணைப்புகள்

[தொகு]