உள்ளடக்கத்துக்குச் செல்

மண்டசௌர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 24°04′21″N 75°04′05″E / 24.072617°N 75.067944°E / 24.072617; 75.067944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்டசௌர் மாவட்டம்
मंदसौर जिला
மண்டசௌர்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்உஜ்ஜைன்
தலைமையகம்மண்டோசோர்
பரப்பு5,535 km2 (2,137 sq mi)
மக்கட்தொகை1,340,411 (2011)
மக்கள்தொகை அடர்த்தி242/km2 (630/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை20.71%
படிப்பறிவு71.78
பாலின விகிதம்963
வட்டங்கள்8
மக்களவைத்தொகுதிகள்மண்டோசோர்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மண்டசௌர் மாவட்டம் (Mandsaur District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் 52 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மண்டோசோர் ஆகும். இது உஜ்ஜைன் கோட்டத்தில் அமைந்துள்ளது. குப்தப் பேரரசு காலத்திய மால்வா மன்னர் யசோதர்மன் நிறுவிய வெற்றித் தூண் மண்டோசோர் நகரத்தின் அருகே சேந்தனி கிராமத்தில் உள்ளது.

மாவட்ட எல்லைகள்

[தொகு]

மண்டசௌர் மாவட்டத்தின் வடகிழக்கில் இராஜஸ்தான் மாநிலத்தின் சித்தௌகர் மாவட்டம், கிழக்கில் இராஜஸ்தானின் கோட்டா மாவட்டம், தென்கிழக்கில் இராஜஸ்தானின் ஜலாவார் மாவட்டம், தெற்கில் ரத்லாம் மாவட்டம், மேற்கில் இராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப்கர் மாவட்டம், வடமேற்கில் நீமச் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

பொருளாதாரம்

[தொகு]

வறண்ட வானிலை கொண்ட மண்டசௌர் மாவட்டத்தில் அதிக அளவில் அபின் உற்பத்தி செய்யப்படுகிறது. சிலேட்டுக்கல் கனிமம் அதிக அளவில் காணப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

இம்மாவட்டம் நான்கு உட்கோட்டங்களும்; மண்டசௌர், மல்ஹர்கா, கரோத், சாம்கர், தலௌதா, பன்புரா, சுவஸ்ரா மற்றும் சீதாமௌ என எட்டு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,340,411 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 79.29% மக்களும்; நகரப்புறங்களில் 20.71% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 13.24% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 682,851 ஆண்களும் மற்றும் 657,560 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 963 பெண்கள் வீதம் உள்ளனர். 5,535 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 242 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 71.78% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 85.14% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 57.98% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 177,659 ஆக உள்ளது. [1]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,192,588 (88.97 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 125,548 (9.37 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,120 (0.08 %) ஆகவும், , சீக்கிய சமய மக்கள் தொகை 849 (0.06 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 19,029 (1.42 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 242 (0.02 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 77 (0.01 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 958 (0.07 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

[தொகு]

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டசௌர்_மாவட்டம்&oldid=3890726" இலிருந்து மீள்விக்கப்பட்டது