உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தோர் அரசு

ஆள்கூறுகள்: 22°43′31″N 75°51′56″E / 22.7252°N 75.8655°E / 22.7252; 75.8655
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்தூர் அரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தோர் அரசு
इंदौर रियासत
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா

1818–1948
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of இந்தோர்
Location of இந்தோர்
குவாலியர் அரசு மற்றும் போபால் இராச்சியங்களுடன் இந்தூர் அரசின் வரைபடம்
வரலாறு
 •  பிரித்தானிய இந்தியப் பேரரசின் கீழ் 1818
 •  இந்திய விடுதலை 15 சூன் 1948 1948
பரப்பு
 •  1931 24,605 km2 (9,500 sq mi)
Population
 •  1931 13,25,089 
மக்கள்தொகை அடர்த்தி 53.9 /km2  (139.5 /sq mi)
தற்காலத்தில் அங்கம் மத்தியப் பிரதேசம், இந்தியா
Public Domain இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
இந்தூர் அரசின் பழைய அரண்மனை
இந்தூர் மகாராஜா துக்கோஜிராவ் ஹோல்கர்

இந்தோர் அரசு அல்லது ஹோல்கர் அரசு (Indore State or Holkar State),[1]பிரித்தானிய இந்தியாவுக்கு கட்டுப்பட்ட மராத்திய ஓல்கர் வம்சத்தவர்கள் கி பி 1818 முதல் இந்தூர் அரசை ஆண்ட மன்னர் அரசாகும்.

தற்கால மத்தியப் பிரதேசத்தில் அமைந்த இந்தூர் அரசு, 1931-இல் மொத்தப் பரப்பளவு 24,605 சதுர கிலோ மீட்டரும், 3,368 கிராமங்களும்[2], 1,325,089 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இந்தூர் அரசின் முதல் தலைநகராக மஹேஷ்வர் நகரம் விளங்கியது. பின்னர் இந்தூருக்கு மாற்றப்பட்டது. பிற முக்கிய நகரங்கள் கார்கோன், பர்வாஹா மற்றும் பான்புரா ஆகும்.

இந்தூர் நகரம் மத்திய இந்தியாவின் முக்கிய வணிக மையமாகவும், படைகளின் பாசறையாகவும் விளங்கியது.

வரலாறு[தொகு]

ஓல்கர் வம்சத்தின் நிறுவனரும், மராத்தியப் படைத்தலைவரும் ஆன மல்ஹர் ராவ் ஓல்கருக்கு, மராத்தியப் பேரரசின் பேஷ்வா வழங்கிய இந்தூர் மற்றும் 28 சிறு நிலப்பரப்புகளைக் கொண்டு, 29 சூலை 1732-இல் இந்தூர் அரசை நிறுவினார். இவரது மருமகள் அகில்யாபாய் ஓல்கர் ஆவார். மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில் மராத்திய ஓல்கர் தோல்வி கண்ட பின்னர், பிரித்தானிய இந்தியாவுடன் மராத்திய இந்தூர் அரசு 6 சனவரி 1818-இல் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி, பிரித்தானிய இந்திய அரசின் பாதுக்காப்பிற்குட்பட்ட, சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இந்தூர் அரசின் தலைநகர் மஹேஷ்வர் நகரத்திலிருந்து இந்தூர் நகரத்திற்கு 3 நவம்பர் 1818-இல் மாற்றப்பட்டது.

இந்திய விடுதலைக்கு பின்னர்[தொகு]

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்தூர் அரசு சுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கும் உடன்படிக்கையில், இந்தூர் அரசின் இறுதி மன்னர் யஷ்வந்த்ராவ் ஓல்கர் 1 சனவரி 1950-இல் கையொப்பமிட்டார்.

இந்தூர் அரசின் ஆட்சியாளர்கள்[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் அரச நிர்வாகம், இந்தூர் மன்னர்களுக்கு 19 பீரங்கி குண்டுகள் முழங்கி மரியாதை செய்தனர்.[3]

பெயர் பிறப்பு இறப்பு ஆட்சிக் காலம்
மல்ஹர் ராவ் ஓல்கர் 1694 1766 1731 – 20 மே 1766
இரண்டாம் மாலே ராவ் ஓல்கர் 1745 1767 20 மே 1766 – 5 ஏப்ரல் 1767
அகில்யாபாய் ஓல்கர் 1725 1795 ஏப்ரல் 1767 – 13 ஆகஸ்டு 1795
முதலாம் துகோசி ராவ் ஓல்கர் 1723 1797 13 ஆகஸ்டு 1795 – 29 சனவரி 1797
காசி ராவ் ஓல்கர் ? 1808 29 சனவரி 1797 – சனவரி 1799
காந்தே ராவ் ஓல்கர் 1798 1806 சனவரி 1799 – 1806
யஷ்வந்த் ராவ் ஓல்கர் 1776 1811 1806 – 27 அக்டோபர் 1811
மூன்றாம் மல்ஹர் ராவ் ஓல்கர் 1801 1833 நவம்பர் 1811 – 27 அக்டோபர் 1833
துளசி பாய் (பெண்), (காப்பாளர்) ? 1817 நவம்பர் 1811 – 20 டிசம்பர் 1817
மார்த்தாண்ட ராவ் ஓல்கர் 1830 1849 27 அக்டோபர் 1833 – 2 பிப்ரவரி 1834
ஹரி ராவ் ஓல்கர் 1795 1843 2 பிப்ரவரி 1834 – 24 அக்டோபர் 1843
இரண்டாம் காந்தே ராவ் ஓல்கர் 1828 1844 24 அக்டோபர் 1843 – 17 பிப்ரவரி 1844
மகாராணி மஜ்ஜி ? 1849 24 அக்டோபர் 1843 – 17 பிப்ரவரி 1844
இரண்டாம் துக்கோஜி ராவ் ஓல்கர் 1835 1886 27 சூன் 1844 – 17 சூன் 1886
மகாராணி மஜ்ஜி ? 1849 27 சூன் 1844 – செப்டம்பர் 1849
சிவாஜி ராவ் ஓல்கர் 1859 1908 17 சூன் 1886 – 31 சனவரி 1903
மூன்றாம் துக்கோஜி ராவ் ஓல்கர் 1890 1978 31 சனவரி 1903 – 26 பிப்ரவரி 1926
இரண்டாம் யஷ்வந்த் ராவ் ஓல்கர் 1908 1961 26 பிப்ரவரி 1926 – 15 ஆகஸ்டு 1947
உஷா தேவி ஓல்கர் 1961 தற்போது வரை

இதனையும் காண்க[தொகு]

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Princely States of India
  2. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.
  3. "Indore Princely State (19 gun salute)". Archived from the original on 2018-06-06. பார்க்கப்பட்ட நாள் 2016-12-13.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Indore State
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோர்_அரசு&oldid=3996987" இலிருந்து மீள்விக்கப்பட்டது