உள்ளடக்கத்துக்குச் செல்

லோகாரு சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோகாரு சமஸ்தானம்
लोहारू रियासत
ریاست لوہارو
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1806–1947

Flag of லோகாரு

கொடி

Location of லோகாரு
Location of லோகாரு
1903-இல் பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)
தலைநகரம் லோகாரு
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1806
 •  1947 இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1947
Population
 •  1901 15,229 
தற்காலத்தில் அங்கம் லோகாரு தாலுகா, பிவானி மாவட்டம், அரியானா, இந்தியா
லோகாரு நவாப் அமீருத்தீன் அகமது கான், ஆட்சிக்காலம், 1884-1920.
லோகாரு சமஸ்தான நவாப் அமீன் உத்தீன் அகமது கான் வெளியிட்ட நீதிமன்ற கட்டண வில்லை
(ஆட்சிக் காலம் 1926–1947)

லோகாரு சமஸ்தானம் (Loharu State), 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால இந்தியாவின் அரியானா மாநிலத்தின் பிவானி மாவட்டத்தின் லோகாரு தாலுகாவின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, லோகாரு சமஸ்தானம் 570 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 15,229 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.[1]

வரலாறு

[தொகு]

மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த இசுலாமிய நவாபுகள் ஆண்ட லோகாரு சமஸ்தானம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற லோகாரு இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தின், பஞ்சாப் அரசுகள் முகமையின் கீழ் செயல்பட்டது. லோகாரு சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி லோகாரு சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, லோகாரு சமஸ்தானம பஞ்சாப் மாநிலத்தில் இணைக்கப்பட்டது. பின்னர் 1966-ஆம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்ட அரியானா மாநிலத்தின் பிவானி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Loharu Princely State (nine gun salute)". Archived from the original on 2019-10-03. பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகாரு_சமஸ்தானம்&oldid=3778633" இலிருந்து மீள்விக்கப்பட்டது