சீதாமௌ இராச்சியம்
சீதாமௌ இராச்சியம் | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
தலைநகரம் | சீதாமௌ | |||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1701 | ||||
• | இந்தியாவுடன் இணைத்தல் | 1948 | ||||
பரப்பு | ||||||
• | 1901 | 906 km2 (350 sq mi) | ||||
Population | ||||||
• | 1901 | 23,863 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) |
சீதாமௌ இராச்சியம் (Sitamau State) பிரித்தானிய இந்தியாவின் கீழ் இருந்த சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் சீதாமௌ நகரம் ஆகும். இது தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டசௌர் மாவட்டத்தில் இருந்தது. சீதாமௌ இராச்சியத்தை 1701-ஆம் ஆண்டில் நிறுவியவர் இராஜா கேசவதாஸ் ஆவார். 350 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்த சீதாமௌ இராச்சியத்தின் சராசரி ஆண்டு வருவாய் ரூபாய் 1,30,000 ஆகும்.[1] முகலாயர்]]களுக்கு ஜிஸ்யா வரியை செலுத்தாத காரணத்தால் ரத்லம் இராச்சியத்தை முகலாயப் பேரரசில் இணைத்தனர். 1705-இல் கேசவதாஸ் ரத்லம் இராச்சியத்தை சீதாமௌ இராச்சியத்துடன் இணைத்து கொண்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948-ஆம் ஆண்டில் அரசியல் இணைப்பு ஒப்பந்தப்படி சீதாமௌ இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
ஆட்சியாளர்கள்
[தொகு]சீதாமௌ இராச்சியத்தின் ஆட்சியாளர்கள் இராஜபுத்திரர்களான ரத்தன் சிங் ரத்தோரின் வழித்தோன்றல்கள் ஆவார்.[2]
மன்னர்கள்
[தொகு]- 1701 – 1748 கேசவ தாஸ்
- 1748 – 1752 கஜ் சிங்
- 1752 – 1802 பதே சிங்
- 1802 – 1867 முதலாம் ராஜராம் சிங் (இறப்பு: 1867)
- 1867 – 28 மே 1885 பவானி சிங் (பிறப்பு. 1836 – இறப்பு 1885)
- 8 டிசம்பர் 1885 – 1899 பகதூர் சிங்
- 1899 – 9 மே 1900 சார்துல் சிங்
- 11 மே 1900 – 15 ஆகஸ்டு 1947 இரண்டாம் இராஜாராம் சிங் (பிறப்பு:. 1880 – இறப்பு. 1967) (11 டிசம்பர் 1911 முதல் இரண்டாம் இராஜராம் சிங்)[3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Imperial Gazetteer of India, v. 23, p. 51.
- ↑ Imperial Gazetteer of India, v. 23, p. 51.
- ↑ "Indian Princely States K-Z". www.worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 15 August 2019.