உள்ளடக்கத்துக்குச் செல்

கூச் பெகர் சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Warning: Value not specified for "common_name"
Error: No name(s) given
சுதேச சமஸ்தானம் கூச் பெகர் சமஸ்தானம்
1586–1949 [[மேற்கு வங்காளம்|]]

Flag of {{{common_name}}}

கொடி

Location of {{{common_name}}}
Location of {{{common_name}}}
1931-ஆம் ஆண்டில் தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் கூச் பெகர் இராச்சியம்
வரலாற்றுக் காலம் பிரித்தானிய இந்தியா
 •  நிறுவப்பட்டது 1586
 •  இந்திய விடுதலை 1949
பரப்பு
 •  1901 3,385 km2 (1,307 sq mi)
தற்காலத்தில் அங்கம் கூச் பெகர் மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா
கூச் பெகர் அரண்மனை
1913-இல் கூச் பெகர் மன்னர் ஜிதேந்திர நாராயணன்
கூச் பெகர் இளவரசி மற்றும் ஜெய்ப்பூர் இராணி காயத்திரி தேவி மற்றும் ஜெய்ப்பூர் இராச்சிய மன்னர் இரண்டாம் மன்சிங்
கூச் பெகர் மகாராணி சுனிதி தேவி

கூச் பெகர் இராச்சியம் (Cooch Behar)[1]இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் கூச் பெகர் நகரம் ஆகும். இது தற்கால மேற்கு வங்காளம் மாநிலத்தின் கூச் பெகர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டில் கூச் பெகர் இராச்சியம் 3,385 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். கூச் பெகர் சமஸ்தானம் பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாண ஆளுநரின் கீழ இருந்தது.[2]

வரலாறு

[தொகு]

1586-ஆம் ஆண்டில் காமதா இராச்சிய மன்னர் நர நாராயணன் இறந்த பிறகு காமதா இராச்சியத்தின் கிழக்குப் பகுதிகளை அகோம் இராச்சியத்தினர் கைப்பற்றினர். எனவே காமதா இராச்சியத்தின் மேற்கு பகுதியில் உள்ள கூச் பெகர் நகரத்தை தலைநகராகக் கொண்டு கூச் பெகர் இராச்சியத்தை நிறுவினர். இந்த இராச்சியம் அடிக்கடி திபெத் மற்றும் பூட்டான் இராச்சியத்தினரின் படையெடுப்புகளுக்கு உள்ளாகியது. எனவே கூச் பெகர் இராச்சியத்தினர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் படை உதவியை நாடினர்.

1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற கூச் பெகர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது வங்காள மாகாணத்தின் கீழ் செயல்பட்டது. கூச் பெகர் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி கூச் பெகர் இராச்சியம் 1949-ஆம் ஆண்டில் மேற்கு வங்காள மாநிலத்துடன் இணக்கப்பட்டது.

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. "The eastern division was known as 'Kamrup' in the local sources and as 'Koch Hajo' in the Persian chronicles. The western division known as Koch Behar was known as 'Kuc' (Koch) or 'Koch Behar' in Persian chronicles, or simply as 'Behar' in the Gurucharitas." (Nath 1989, p. 86)
  2. Princely States of India

மேற்கோள்கள்

[தொகு]
  • Nath, D (1989), History of the Koch Kingdom: 1515–1615, Delhi: Mittal Publications

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூச்_பெகர்_சமஸ்தானம்&oldid=3708825" இலிருந்து மீள்விக்கப்பட்டது