சம்பா சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்பா இராச்சியம்
चम्बा रियासत
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
~550[1]–1948
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of சம்பா
Location of சம்பா
பிரித்தானிய இந்தியாவின் சிம்லா மலை சுதேச சமஸ்தானங்களின் வரைபடம், ஆண்டு 1911
தலைநகரம் சம்பா
வரலாறு
 •  நிறுவப்பட்டது ~550[1]
 •  இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
பரப்பு
 •  1892 8,329 km2 (3,216 sq mi)
Population
 •  1892 115,773 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் சம்பா மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
Chamba Princely State
18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சம்பா சமஸ்தான இளவரசி
சம்பா இராச்சிய மன்னர் கோபால் சிங் (ஆட்சிக் காலம் 1870–1873)

சம்பா சமஸ்தானம் (Chamba State)[2] 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால இந்தியாவின் இமயமலையில் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் சம்பா மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1892-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சம்பா இராச்சியம் 8,329 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,15,773 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.

1859 முதல் 1947 முடிய பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தின் கீழிருந்த இதன் ஆட்சியாளர்களுக்கு, பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர. 1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் 18 ஏப்ரல் 1948 அன்று சம்பா சமஸ்தானம் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

இமயமலையில் அமைந்த சம்பா இராச்சியத்தின் வடக்கில் ஜம்மு காஷ்மீர் இராச்சியம், கிழக்கில் லாஹௌல் , தென்கிழக்கில் காங்கிரா சமஸ்தானம் மற்றும் தெற்கில் குர்தாஸ்பூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. சம்பா இராச்சியத்தில் ராவி ஆறு பாய்கிறது.

வரலாறு[தொகு]

சூரிய வம்ச இராசபுத்திர குலத்தினர் சம்பா இராச்ச்சியத்தை நிறுவினர். பின்னர் இது முகலாயப் பேரரசு, சீக்கியப் பேரரசு,மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்தது. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1859-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சம்பா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தின் பஞ்சாப் அரசுகள் முகமையின் கீழ் செயல்பட்டது.

சம்பா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி சம்பா இராச்சியம் 15 ஏப்ரல் 1948 அன்று பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, சம்பா இராச்சியம் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. or "6th century" https://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V10_136.gif
  2. "Imperial Gazetteer2 of India, Volume 10, page 130 -- Imperial Gazetteer of India -- Digital South Asia Library". பார்க்கப்பட்ட நாள் 11 March 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பா_சமஸ்தானம்&oldid=3376281" இலிருந்து மீள்விக்கப்பட்டது